மோகன் நாயக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகன் நாயக்கு
Mohan Nayak
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1962–1967
பின்னவர்அனந்த திரிபாதி சர்மா
தொகுதிBhanjanagar, ஒடிசா
பதவியில்
1957–1962
தொகுதிகஞ்சம் தொகுதி, ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-07-03)3 சூலை 1921
பெர்காம்பூர், கஞ்சாம் மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு26 செப்டம்பர் 1983(1983-09-26) (அகவை 62)
பெர்காம்பூர், ஒடிசா, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சந்திரமா
மூலம்: [1]

மோகன் நாயக்கு (Mohan Nayak) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அக்லிட்சா நாயக்கு மற்றும் சந்திரமா நாயக்கு தம்பதியருக்கு மகனாக 1921 ஆம் ஆண்டு சூலை மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஒடிசா சட்டப் பேரவையில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், மக்களவையில் இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்காம்பூர் இடைத்தேர்தல், 1967, 1971 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பெர்காம்பூர், துரா மற்றும் கோபால்பூர் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து முறையே 1, 4, 5 மற்றும் 6 ஆவது ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கஞ்சம் மற்றும் பஞ்ச்நகர் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 2ஆவது மற்றும் 3ஆவது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோகன் நாயக்கு ஒடிசா அரசியலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக பணியாற்றினார்.[1][2][3]

1940 மற்றும் 1941 ஆம் ஆண்டுகளில் சத்தியாக்கிரகத்திற்காகவும், மீண்டும் 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் மோகன் நாயக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.[1]

மோகன் நாயக்கு 1983 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதியன்று தனது 62 ஆவது வயதில் இறந்தார்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Nayak,Shri Mohan — Members Bioprofile". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 14 September 2020.
  2. Sir Stanley Reed (1958). The Times of India Directory and Year Book Including Who's who. Bennett, Coleman & Company. பக். 1121. https://books.google.com/books?id=WAIfAQAAMAAJ. பார்த்த நாள்: 16 May 2020. 
  3. India. Parliament. Lok Sabha (1966). Lok Sabha Debates. Lok Sabha Secretariat.. பக். 8391. https://books.google.com/books?id=bR83AAAAIAAJ. பார்த்த நாள்: 16 May 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகன்_நாயக்கு&oldid=3803541" இலிருந்து மீள்விக்கப்பட்டது