மோகனா போகராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகனா போகராஜு
பின்னணித் தகவல்கள்
பிறப்பிடம்ஐதராபாத்து, இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகர்
இசைக்கருவி(கள்)
  • குரலிசை
இசைத்துறையில்2013–தற்போது வரை

மோகனா போகராஜு ( Mohana Bhogaraju ) [1] ஒரு இந்தியப் பின்னணி பாடகியாவார் . [2] இவர் தெலுங்கு, தமிழ், படங்களுக்காக பாடியுள்ளார். பாகுபலி திரைப்படத்தில் இடம்பெற்ற "மனோஹரி" என்ற பாடல் மூலம் இவர் அனைவராலும் கவனிக்கப்பட்டார். மேலும், தெலுங்குத் திரையுலகில் "ரேடியோ மிர்ச்சியின்-மிர்ச்சி மியூசிக் வளர்ந்துவரும் பெண் பாடகர் 2015" விருதையும் வென்றவராவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

இவர், தனது 6 வயதில் பாடத் தொடங்கினார். இவரது தாயார் இவரது திறமையை அங்கீகரித்து பல்வேறு இடங்களில் நடைபெற்ற பல பாடல் போட்டிகளில் பங்குகொள்ள ஊக்குவித்தார். முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் மறைந்த "டி. ஸ்ரீபாத ராவ்" அவர்களிடமிருந்து தனது 8வது வயதில் தனது முதல் விருதையும் பெற்றுள்ளார். [3]

இசை வாழ்க்கை[தொகு]

மோகனா தனது திரை வாழ்க்கையை 2013இல் தொடங்கினார். ஜெய் ஸ்ரீராம் படத்தில் தனது முதல் பாடலைப் பாடினார். பின்னர், இராஜமௌலி இயக்கத்தில் கீரவாணியின் இசையமைப்பில் 2015ல் வெளியான தெலுங்குத் திரைப்படமான "பாகுபலி" படத்தில் இடம்பெற்ற "மனோஹரி " என்ற பாடலை பாடிய பிறகு இவர் நன்கு பொது மக்களால் அறியப்பட்டார். பின்னர், "பலே பலே மொகாடுவேய்" திரைப்படத்தின் இவரது "பேல் பேல்" பாடல் ரேடியோ மிர்ச்சியில் பட்டியலிடப்பட்டது. [4] இவர் மஸ்த் கலந்தரின் மறுபதிப்பையும் பாடினார். [5] 100க்கும் மேற்பட்ட தெலுங்குத் திரைப்படங்களில் இவர் குரல் கொடுத்துள்ளார். [6]

விருதுகளும் பரிந்துரைகளும்[தொகு]

  • பாகுபலி (2015) திரைப்படத்தின் "மனோஹரி " பாடலுக்கான "ரேடியோ மிர்ச்சி மியூசிக் - வளர்ந்துவரும் பெண் பாடகர்" விருது.
  • இஞ்சி இடுப்பழகி (2015) படத்தின் தெலுங்கு பதிப்பான "சைஸ் ஜீரோ" [7] திரைப்படத்தின் "சைஸ் செக்ஸி" பாடலுக்காக தெலுங்கில் சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
  • அரவிந்த சமேதா வீர ராகவா (2018) திரைப்படத்தின் "ரெட்டம்ம தல்லி" பாடலுக்கான டி.எஸ்.ஆர் - டிவி 9 சிறப்பு ஜூரி விருது.
  • அரவிந்த சமேதா வீர ராகவா (2019) திரைப்படத்தின் "ரெட்டம்மா தல்லி" பாடலுக்கு தெலுங்கு சிறந்த பெண் பின்னணி பாடகருக்கான பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோகனா_போகராஜு&oldid=3159909" இருந்து மீள்விக்கப்பட்டது