மொய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொய் என்பது தனிநபர்கள் நடத்தும் விழாக்களில் கலந்துகொள்பவர்கள் பணமாக அளிக்கும் பரிசு ஆகும். மொய்யில் மூன்று வகைகள் உண்டு திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா போன்ற குடும்ப விழாக்களில் அளிக்கப்படும் மொய் என்பது ஒருவகை, இது அன்பளிப்பு ஆகும். நிதித் தேவையை நிறைவு செய்யும் எண்ணத்துடனே ஏற்பாடு செய்யப்படும் மொய்விருந்து என்பது இன்னொருவகை. இது திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் போன்றது.மூன்றாவது இறப்பின் போது இழவு வீட்டில் செய்வது.

மொய் விருந்து[தொகு]

மொய் விருந்துகள் பெரும்பாலும் ஆடி மாதத்தில் நடத்தப்படும். இந்த வழக்கம் பொதுவாக தற்போது தமிழ்நாட்டில், புதுக்கோட்டை மாவட்டமும் அதை ஒட்டிய பகுதிகளிலும் நடத்தப்படுகிறது. இது ஒருவகை நிதி திரட்டல் என்று சொல்லப்படுகிறது.[1] மொய் விருந்தில் ஆட்டுக்கறிச் சாப்பாட்டைப் பறிமாறுகிறார்கள். விருந்துக்கு அழைப்பிதழ் அச்சடித்து தெரிந்தவர்களுக்கு எல்லாம் கொடுக்கப்படுகிறது. ஐந்து அல்லது பத்து நபர்கள் சேர்ந்தும் விருந்து நடத்துவர். அனைவரும் பொதுவான அழைப்பிதழ் அடித்து வேண்டியவர்களை அழைப்பர், விருந்து உண்டவர்கள் தாங்கள் விரும்பியவருக்கு மொய் எழுதலாம். விழா முடிந்தபின் விழா ஏற்பாட்டாளர்கள் தங்களுக்கு வந்த மொய்ப்பணத்தின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப செலவைப் பங்கிட்டுக் கொள்வார்கள் விருந்துண்டவர்கள் மொய் எழுதவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, இந்த விருந்துகளில் வைக்கப்படும் மொய்ப் பணத்தை கணக்கு எழுதிவைத்து இந்த மொய்வைத்தவர்கள் மொய் விருந்து வைக்கும்போது அவர்கள் வைத்த மொய்யைவிட கூடுதலான தொகையை மொய்யாக வைப்பது அவசியம்.

பொதுவாக, இந்த விருந்துகளைக் கிராமச் சமூகக் கூடத்திலோ, கோயில் இடத்திலோ நடத்துகிறார்கள். [2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொய்&oldid=3578126" இருந்து மீள்விக்கப்பட்டது