மைக்கேல்
மைக்கேல் மலை | |
---|---|
Μυκάλη Samsun Dağı | |
பிரீனேவின் பின்னால் காணப்படும் மைக்கேல் மலையின் ஒரு தோற்றம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,237 m (4,058 அடி)உயரம் கொண்டது டிலெக் டெபேசி என்ற பகுதியாகும்; சராசரி உயரம் 600 மீட்டர் (1,969 அடி) |
ஆள்கூறு | 37°40′N 27°05′E / 37.667°N 27.083°E |
பெயரிடுதல் | |
மொழிபெயர்ப்பு | சாம்சன் மலை |
பெயரின் மொழி | துருக்கிய மொழி |
புவியியல் | |
அய்டின் மாகாணம், துருக்கி குடியரசு | |
மூலத் தொடர் | மெண்டரஸ் மாசிஃப் பகுதியில் உள்ள அய்டின் மலைத்தொடர் |
நிலவியல் | |
மலையின் வகை | கடலடி மலைத்தொடர், 200 கிலோமீட்டர்கள் (124 mi) நீளம் |
ஏறுதல் | |
எளிய வழி | மலை ஏற்றம் |
மைக்கேல் (Mycale, Mykale அல்லது Mykali, பண்டைக் கிரேக்கம்: Μυκάλη , Mykálē ), நவீன துருக்கியில் Samsun Dağı மற்றும் Dilek Dağı ( Dilek Peninsula ) என்று அழைக்கப்படுவது துருக்கியின் நடு அனத்தோலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஒரு மலையாகும், இது மேயண்டர் ஆற்றின் முகத்துவாரத்துக்கு வடக்கே கிரேக்க தீவான சமோசிலிருந்து 1.6 கிமீ அகலமுள்ள மைக்கேல் ஜலசந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மலை கடலடி மலைத்தொடரின் வடிவத்தைக் கொண்டுள்ளது. இது பண்டைய காலத்தில் டிரோகிலியம் பிரோமண்டரி ( பண்டைய கிரேக்கம் Τρωγίλιον அல்லது Τρωγύλιον) என அறியப்பட்டது. இதன் வடக்கு கரையில் மணல் முதல் கூழாங்கற்கள் வரை கொண்ட பல வகையான கடற்கரைகள் உள்ளன. தெற்குப் பகுதி முக்கியமாக செங்குத்துச் சரிவாகும்.
செவ்வியல் கிரேக்கத்தின் புவிசார் அரசியல் ரீதியாக இது ஐயோனியாவின் ஒரு பகுதியாக இருந்தது. இப்பகுதியில் துறைமுக வசதிகளுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்ட இரண்டு ஐயோனியன் நகரங்களின் இடிபாடுகள் எஞ்சியுள்ளன. ஆனால் இன்று அவை கடற்கரையில் இருந்து பல மைல்கள் தள்ளி உள்நாட்டில் காணப்படுகின்றன. அதற்கும் கடல்பகுதிக்கும் இடையில் ஒரு வளமான வேளாண் சமவெளி மற்றும் வடிநில புல்தரைக்காடுகள் உள்ளன. ஆற்றில் இருந்து வண்டல் படிவத்தால் இவை உருவாயின. இது தொடர்ந்து புவியியல் மாற்றத்தை உருவாக்குகிறது.
1966 ஆம் ஆண்டு முழு மலைமுகடு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது; Dilek Yarimadisi Milli Parki ("Dilek Peninsula National Park") இது 109.85 சதுர கிலோமீட்டர்கள் (27,145 ஏக்கர்கள்) கொண்டதாக உள்ளது. இது பொதுமக்களால் ஓரளவு அணுகக்கூடியது. மீதியுள்ள பகுதி இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேசியப் பூங்காவாக ஆக்கப்பட்டது பழைய சூழலியல் திரும்புவதற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இது 60% மாக்விஸ் புதர் நிலமாகும் . இப்பகுதியில் அதிகமாக இருந்த உயிரினங்களுக்கு இது புகலிடமாக உள்ளது.