உள்ளடக்கத்துக்குச் செல்

பிரீனே

ஆள்கூறுகள்: 37°39′35″N 27°17′52″E / 37.65972°N 27.29778°E / 37.65972; 27.29778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரீனே
Πριήνη (in பண்டைக் கிரேக்க மொழி)
Prien (in துருக்கிய மொழி)
பேரரசர் அலெக்சாந்தரால் நிதியளிக்கப்பட்ட ஏதீனா கோயில், மைக்கேலின் ஒரு சரிவின் அடிவாரத்தில் உள்ளது. ஐந்து நெடுவரிசை தூண்கள் 1965-66 இல் இடிபாடுகளிலிருந்து எடுத்து அமைக்கப்பட்டன. மேலும் அவை கணக்கிடப்பட்ட அசல் நெடுவரிசை தூண்களின் உயரத்தை விட 3 மீட்டர் (9.8 அடி) குறைவாக உள்ளன.
பிரீனே is located in துருக்கி
பிரீனே
Shown within Turkey
மாற்றுப் பெயர்Sampson
இருப்பிடம்Güllübahçe, Söke, அய்டன் மாகாணம், துருக்கி
பகுதிஐயோனியா
ஆயத்தொலைகள்37°39′35″N 27°17′52″E / 37.65972°N 27.29778°E / 37.65972; 27.29778
வகைSettlement
பரப்பளவு37 ha (91 ஏக்கர்கள்)
வரலாறு
கட்டுநர்Theban colonists
கட்டப்பட்டதுApproximately 1000 BCE
Associated withபையாஸ், Pythius

பிரீனே ( Priene, பண்டைக் கிரேக்கம்Πριήνη Priēnē; துருக்கியம்: Prien) என்பது பண்டைய கிரேக்க நகரமான ஐயோனியா (மற்றும் ஐயோனியன் கூட்டமைப்பின் உறுப்பினர்) மைக்கேலின் செங்குத்து சரிவின் அடிவாரத்தில், சுமார் 6 கிலோமீட்டர்கள் (3.7 mi) ) தொலைவில், மாயண்டர் நதியின் போக்கிற்கு வடக்கே (இப்போது Büyük Menderes அல்லது "பிக் மேண்டர்" என்று அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது. இது பண்டைய அந்தியாவிலிருந்து 67 கிலோமீட்டர் (42 மை) தொலைவிலும், பண்டைய அனியோனிலிருந்து 15 கிலோமீட்டர் (9.3 மைல்) தொலைவிலும், பண்டைய மிலேட்டசிலிருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவிலும் இருந்தது. இந்த நகரம் கடல் கடற்கரையில் உருவாக்கப்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 380 மீட்டர் (1,250 அடி) உயரம் வரை செங்குத்தான சரிவுகள் மற்றும் அதன்மேல் உருவாக்கப்பட்டது.[1] பல நூற்றாண்டுகளாக வளைகுடாவில் வந்து படிந்த ஆற்று வண்டல் காரணமாக, நகரம் இப்போது கடற்கரையில் இருந்து தள்ளி உள்நாட்டுப் பகுதியாகி உள்ளது. இது துருக்கியின் அய்டன் மாகாணத்தின் சோக் மாவட்டத்தில் உள்ள நவீன கிராமமான குல்லுபாஹே டுரூனுக்கு மேற்கே சற்று தொலைவில் அமைந்துள்ளது.

பிரீனே உயர்தர எலனியக் கலை மற்றும் கட்டிடக்கலையின் தளமாக அறியப்படுகிறது. தீபகற்பமான இப்பகுதியில் இரண்டு துறைமுகங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இந்த நகரமானது ஒப்பீட்டளவில் வரையறுக்கப்பட்ட அளவு கொண்டதன் காரணமாக பிரைன் எப்போதும் பெரிய அளவில் அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக இருக்கவில்லை. ஏனெனில் நான்கிலிருந்து ஐந்தாயிரம் மக்கள் இப்பகுதியில் வசித்துவந்தனர் என்று நம்பப்படுகிறது. நகரம் நான்கு மாவட்டங்களாக பிரிக்கபட்டிருந்தது. முதலில் அரசியல் மாவட்டம், இது பொலியூட்டிரியன் மற்றும் பிரிடேனியன் ஆகியவற்றைக் கொண்டது. அடுத்து நாடகம் கொண்ட பண்பாட்டு மாவட்டம், இது அகோராவை கொண்டிருந்தது. அடுத்து வணிக மாவட்டம். இறுதியாக சமயம் சார்ந்த மாவட்டம், இதில் சியுசு, டிமிடர் மற்றும் மிக முக்கியமாக, அதீனா கோயில் ஆகியவற்றுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிற்றாலயங்களைக் கொண்டு இருந்தது.

குறிப்புகள்[தொகு]

  1. Grant, Michael (1986). A Guide to the Ancient World. New York: Barnes & Noble, Inc. pp. 523–524. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7607-4134-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரீனே&oldid=3396980" இலிருந்து மீள்விக்கப்பட்டது