உள்ளடக்கத்துக்குச் செல்

மேவாரின் ஜெய் சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேவாரின் ஜெய் சிங்
மேவாரின் மகாராணா
ஜெய் சிங்
மேவாரின் மகாராணா
ஆட்சிக்காலம்1680–98
முன்னையவர்முதலாம் ராஜ் சிங்
பின்னையவர்இரண்டாம் அமர் சிங்
பிறப்பு(1653-12-05)5 திசம்பர் 1653
இறப்பு23 செப்டம்பர் 1698(1698-09-23) (அகவை 44)
குழந்தைகளின்
பெயர்கள்
இரண்டாம் அமர் சிங்
ராணி சா விஜயவதி பாய்
அரசமரபுமேவாரின் சிசோதியர்கள்
தந்தைமுதலாம் ராஜ் சிங்

ஜெய் சிங் (Jai Singh of Mewar) [1] (5 டிசம்பர் 1653 - 23 செப்டம்பர் 1698), 1680 முதல் 1698 வரை ஆட்சி செய்த மேவார் இராச்சியத்தின் மகாராணா ஆவார். இவர் முதலாம் மகாராணா முதலாம் ராஜ் சிங்கின் மகன். ஜெய் சிங் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பிற்கு எதிராக தொடர்ச்சியான போர்களை நடத்தினார். 1680-81 இல், இவர் தனது தளபதியான தயாள்தாஸை மால்வாவிற்கு அனுப்பினார். தயாள்தாஸ் தார் மற்றும் மாண்டுவை ஆக்கிரமித்து, அந்த நகரங்களை சூறையாடினார். மேலும், முகலாய இராணுவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போர்களை நடத்தினார்.[2] ஜெய் சிங் ஆம்பரின் கச்சவா இளவரசி தயாவதி பாய் (1650-1683) என்பவரை மணந்தார். 1685 இல் ஜெய்சமந்த் என்றும் அழைக்கப்படும் தேபார் ஏரியயைக் கட்டினார்.

ஔரங்கசீப் தனது மூன்று மகன்கள் மற்றும் மகாராணாவை விட 5 மடங்கு அதிக எண்ணிக்கையிலான இராணுவத்துடன் நடத்திய கடைசி தாக்குதலில், மகாராணா ஜெய் சிங் தனது குடிமக்களுடன் (கிராம மக்கள் உட்பட) அனைத்து உணவுப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு நாட்டிலுள்ள கிணறுகளின் தண்ணீரை பாழ்படுத்திவிட்டு பிறகு வெவ்வேறு குகைகளின் கீழ் தஞ்சம் புகுந்தார். ஔரங்கசீப் கிராமங்களைத் தாக்கியபோது, அவர் கொள்ளையடிக்க எதுவும் இருக்கவில்லை.

சான்றுகள்[தொகு]

  1. "Udaipur". Archived from the original on 27 December 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2013.
  2. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. p. 183. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38060-734-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேவாரின்_ஜெய்_சிங்&oldid=3800487" இலிருந்து மீள்விக்கப்பட்டது