மேனி கலோன்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேனி கலோன்சோ (Manny Calonzo) ஒரு சுற்றுச்சூழல் வழக்கறிஞராவார். [1] இவர் நிறுவிய அமைப்பான பிலிப்பைன்சின் சுற்றுச்சூழல் கழிவு கூட்டிணைவு நிறுவனம் இவருக்கு உதவிசெய்தது. [2] ஈயத்தைப் பயன்படுத்தி சாயங்கள் உற்பத்தி, பயன்பாடு மற்றும் விற்பனைக்கு தேசிய தடை விதிக்க பிலிப்பைன்சு அரசாங்கத்தை வற்புறுத்திய பிரச்சாரத்திற்கு மேனி கலோன்சோ தலைமை தாங்கினார். [3] சாயம் உற்பத்தியாளர்கள் [4] இந்த தரத்தை பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காக மூன்றாம் தரப்பு சான்றிதழ் [5] திட்டத்தின் வளர்ச்சியையும் இவர் வழிநடத்தினார். 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிலிப்பைன்சில் சாயச் சந்தையில் 85% உற்பத்தியாளர்கள் இத்தரச்சான்றிதழ் பெற்று அவர்களின் உற்பத்தி பாதுகாப்பானது என்று சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. [6]

ஈய வண்ணப்பூச்சின் அபாயங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த நாடுகளில் நன்கு ஆவணப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் - பிலிப்பைன்சு உட்பட, ஈய வண்ணப்பூச்சு ஒரு முக்கிய சுற்றுச்சூழல் சுகாதார பிரச்சினையாக இருந்து வருகிறது. ஆண்களின் ஆண்மைத் திறனைக் குறைத்து, கருவுக்குத் தீங்கும் விளைவிக்கும் என்று கருதப்பட்டு இவரது நச்சு எதிர்ப்பு பிரச்சாரம் காலணி தொடர்புடைய பிற பொருட்களுக்கும் நீட்டிக்கப்பட்டது. [7]

கலோன்சாவின் முன்னெடுப்புகளுக்காக 2018 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. [8] [9] இவர் தனது தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கிய பத்தாண்டுகளுக்குப் [10][11] பின்னர் இதன் விளைவாக மில்லியன் கணக்கான பிலிப்பைன்சு குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர். [12] கலோன்சோ அனைத்துலக கரிம மாசுபடுத்தல் ஒழிப்பு வலையமைப்பில் உலகாய ஈயச் சாயம் ஒழிப்பு பிரச்சாரத்தின் ஆலோசகராக உள்ளார். [13][14]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Announcing the 2018 Goldman Prize winners" (in en-US). Goldman Environmental Foundation. 2018-04-23. https://www.goldmanprize.org/blog/2018-goldman-prize-winners/. 
  2. "Grassroots Environmental Heroes: The 2018 Goldman Environmental Prize Winners". www.greengrants.org. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
  3. "Pinoy, 6 others win environmental prize | Philstar.com". philstar.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
  4. "Manny Calonzo - Goldman Environmental Foundation" (in en-US). Goldman Environmental Foundation. https://www.goldmanprize.org/recipient/manny-calonzo/. 
  5. "Filipino among seven 2018 Goldman Environmental Prize awardees" (in en-US). Manila Bulletin News இம் மூலத்தில் இருந்து 2018-08-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180819182214/https://news.mb.com.ph/2018/04/23/filipino-among-seven-2018-goldman-environmental-prize-awardees/. 
  6. "Goldman Environmental Prize Honors Seven Environmental Heroes" (in en). https://www.businesswire.com/news/home/20180422005092/en/Goldman-Environmental-Prize-Honors-Environmental-Heroes. 
  7. Inquirer, Philippine Daily. "Pinoy campaigner vs lead paint, 6 others win environmental prize" (in en). http://newsinfo.inquirer.net/985125/pinoy-campaigner-vs-lead-paint-6-others-win-environmental-prize. 
  8. "Meet the winners of the 2018 Goldman Environmental Prize" (in en-US). Mongabay Environmental News. 2018-04-23. https://news.mongabay.com/2018/04/meet-the-winners-of-the-2018-goldman-environmental-prize/. 
  9. "2018 Goldman environmental prize - the winners in pictures" (in en-GB). The Guardian. 2018-04-23. https://www.theguardian.com/environment/gallery/2018/apr/23/2018-goldman-environmental-prize-the-winners-in-pictures. 
  10. News, ABS-CBN. "Filipino bags international award for campaign vs lead paint" (in en-US). ABS-CBN News. http://news.abs-cbn.com/focus/04/23/18/filipino-bags-international-award-for-campaign-vs-lead-paint. 
  11. "Manny Calonzo wins Int’l Environment Award for campaign vs lead paint" (in en-US). Good News Pilipinas. 2018-04-25. http://www.goodnewspilipinas.com/manny-calonzo-wins-intl-environment-award-for-campaign-vs-lead-paint/. 
  12. "You'll probably never save as many lives as this guy who got the Philippines to stop using lead paint" (in en-US). Mother Jones. https://www.motherjones.com/politics/2018/04/youll-probably-never-save-as-many-lives-as-this-guy-who-got-the-philippines-to-stop-using-lead-paint/. 
  13. "Goldman Environmental Prize Winners Announced" (in en-US). Financial Tribune. 2018-04-23. https://financialtribune.com/articles/environment/85162/goldman-environmental-prize-winners-announced. 
  14. "Goldman Environmental Prize Winner Manny Calonzo: Painting a Brighter Future for Our Children with Lead Safe Paint | IPEN". ipen.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனி_கலோன்சோ&oldid=3680950" இலிருந்து மீள்விக்கப்பட்டது