மேக்னா பந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேக்னா பந்த்
Meghna Pant
புத்தக வெளீயீட்டு விழாவில்
புத்தக வெளீயீட்டு விழாவில்
பிறப்புசிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
தொழில்பத்திரிக்கையாளர்,
மொழிஆங்கிலம்
கல்விMBA
கல்வி நிலையம்புனித சேவியர் கல்லூரி, மும்பை, நான்யாங்கு வணீகப் பள்ளி
வகைகள்பெண்ணியம், சிறுகதை
இணையதளம்
www.meghnapant.com

மேக்னா பந்த் (Meghna Pant) ஓர் இந்திய எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். இலக்கியம், பாலினப் பிரச்சினைகள் மற்றும் பத்திரிகைத் துறையில் இவரது பங்களிப்பிற்காக இவர் பல்வேறு விருதுகளை வென்றுள்ளார். 2012 ஆம் ஆண்டில், இவர் ஒன் அண்ட்- எ- ஹாஃப் ஒய்ஃப் எனும் தனது முதல் புதினத்திற்காக மியூஸ் இந்தியா தேசிய இலக்கிய இளம் எழுத்தாளர் விருதை வென்றார். இவரது சிறுகதைத் தொகுப்பு, ஹேப்பி பர்த்டே அண்ட் அத்ர் இசுட்டோரிசு ஃபிராங்க் ஓ'கானர் சர்வதேச விருதுக்காக பட்டியலிடப்பட்டது. [1]

தொழில்[தொகு]

பந்த் முன்பு மும்பை மற்றும் நியூயார்க்கில் டைம்ஸ் நவ், என்டிடிவி மற்றும் ப்ளூம்பெர்க்-யுடிவி ஆகியவற்றில் வணிக செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார். [2][3] 2008 நிதி நெருக்கடியின் போது இவர் நியூயார்க் பங்குச் சந்தையில் (NYSE) அறிக்கை வாசித்தார். [1] முழுநேர எழுத்து வாழ்க்கையினைத் தொடர இவர் 2013 இல் அந்தப் பணியில் இருந்து விலகி [1] இந்தியா திரும்பினார். [3]

இவரது முதல் புதினமான ஒன் & எ ஹாஃப் வைஃப் (வெஸ்ட்லேண்ட், 2012) தேசிய மியூஸ் இந்தியா இளம் எழுத்தாளர் விருதை (2014) வென்றது மற்றும் அமேசான் பிரேக் த்ரூ புதின விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது . [4]

பந்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான ஹேப்பி பர்த்டே [1] (ரேண்டம் ஹவுஸ், 2013) ஃபிராங்க் ஓ'கானர் சர்வதேச விருதுக்காக (2014) பட்டியலிடப்பட்டது. [5] இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான தி ட்ரபிள் வித் வுமன் 2016 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

2015 ஆம் ஆண்டில், மும்பையில் "ஃபெமினிஸ்ட் ராணி" என்ற மாதாந்திர குழு விவாதத்தை இவர் தொடங்கினார், இதில் பல இந்தியப் பெண்ணியவாதிகளின் நேர்காணல்கள் இடம்பெற்றன. [3] [6] மூன்று வருட கலந்துரையாடல்களுக்குப் பிறகு, இவர் தனது முதல் புனைகதை அல்லாத ஃபெமினிஸ்ட் ராணி எனும் புத்தகத்தினை 2018 இல் [3] ஷைலி சோப்ராவுடன் இணைந்து எழுதினார். [7] இவரது இரண்டாவது புனைகதை அல்லாத புத்தகம் , 2019 ல் வெளியான ஹவ் டூ கெட் பப்ளிசிடு இன் இண்டியா வெளியீட்டுத் துறை மற்றும் எழுத்தாளர்களின் நேர்காணல்களின் அடிப்படையில் உருவானது. [8]

பந்த் , ஒப்புதல், வன்கலவி, [9] குடும்ப வன்முறை, கருச்சிதைவு, [10] பதிலித்தாய், உடல் இவமானம் [11] ஆகிய பிரச்சினைகள் பற்றி எழுதியுள்ளார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் [12] மற்றும் தி ஹஃபிங்டன் போஸ்ட், [13] மற்றும் சி தெ பீப்பிள் ஆகியவற்றில் பெண்களுக்கான பொதுப் பாதுகாப்பு அலுவலராக இருந்தார். [14] 2018 ஆம் ஆண்டில், பாலின சமத்துவம் குறித்த இவரது படைப்பிற்காக லாட்லி மீடியா விருது வழங்கப்பட்டது. [15]

குடும்ப வன்முறையில் இருந்து தப்பிப்பிழைத்தவராக, [16] பல தளங்களில் பேசினார், குடும்ப வன்முறைக்கு எதிராகப் பேசும்படி பெண்களை வலியுறுத்தினார். இவர் ஜெய்ப்பூர் இலக்கிய விழா உட்பட பல இலக்கிய விழாக்கள் மற்றும் மாநாடுகளில் பேசியுள்ளார் [17] டாடா இலக்கிய விழா, [18] காலா கோடா இலக்கியம் விழா, [19] புனே சர்வதேச இலக்கிய விழா, [20] மற்றும் ஐ.நா பெண்ணிய மாநாடு ஆகிய குறிப்பிடத்தகுந்தது ஆகும். 2018 இல்,ஃபர்சிடு பார்ட் தொகுத்து வழங்கிய #MeToo உரையாடல்கள் நிகழ்வில் கலந்துகொண்டார். [21]

பந்தின் சிறுகதைகள் இவதார் ரிவியூ, [22] வசஃபாரி, எக்லெக்டிகா, [23] மற்றும் கியூஎல்ஆர்எஸ், [24] மற்றும் இவரது கதை "பூந்திங்" ஆகியவை இமாலயன் வில்:ஜர்னிசு ஈசுட்டு ஆஃப் சவுத்-ஈசுட்டுவில் வெளியிடப்பட்டது.

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "Author Meghna Pant's new book deals with women, violence and feminism". Hindustan Times. 1 September 2016."Author Meghna Pant's new book deals with women, violence and feminism". Hindustan Times. 1 September 2016.
 2. Divyamody (September 12, 2017). "25 witty, sharp and fearless women to follow on Twitter". SheThePeople.TV. https://www.shethepeople.tv/news/25-witty-sharp-and-fearless-women-to-follow-on-twitter/. 
 3. 3.0 3.1 3.2 3.3 . 
 4. "Meghna Pant". Penguin Random House India. பார்க்கப்பட்ட நாள் 24 July 2020.
 5. Interview - Meghna Pant பரணிடப்பட்டது 2019-03-28 at the வந்தவழி இயந்திரம் 1 October 2016, Openroadreview.com
 6. "Green and bear it". Mumbai Mirror.
 7. "Penguin releases Shaili Chopra and Meghna Pant's Feminist Rani". Deccan Chronicle. 30 August 2018.
 8. "Authors are vying with Pokémon and Taylor Swift: Meghna Pant". https://www.thehindu.com/books/authors-are-vying-with-pokmon-and-taylor-swift-meghna-pant/article26606836.ece. பார்த்த நாள்: 26 July 2021. 
 9. Pant, Meghna (8 June 2015). "Save Yourself From Rape".
 10. Pant, Meghna (23 March 2019). "Unpregnant". Livemint.
 11. Pant, Meghna (20 August 2015). "Are Mannequins Making Us Too Thin?".
 12. "Domestic violence can be stopped only if we speak out against it: Meghna Pant". Hindustan Times. 4 March 2017.
 13. "Art Attack: Comedians, Prepare To Be Killed For Your Art". HuffPost India (in ஆங்கிலம்). 20 February 2015.
 14. Team, S. T. P. (29 October 2015). "Driving change with feminism and her books: Meghna Pant".
 15. Bureau, BW Online. "Meghna Pant Wins Laadli Media Award". BW Businessworld.
 16. [1] Stop The Violence, Stop The Silence | Meghna Pant | TEDxXLRI
 17. "Speaker - Meghna Pant". Jaipur Literature Festival. 17 September 2013.
 18. "Mid-Day". 9 October 2019.
 19. "E-103 - Kala Ghoda Art Festival 2016 | Avid Learning". www.avidlearning.in. Archived from the original on 2021-09-06. பார்க்கப்பட்ட நாள் 2021-09-27.
 20. Pune Literary Festival Schedule September 2013, ThePunekar.com
 21. "Firstpost's #MeToo Conversations: How must sexual harassment at the workplace be dealt with? - India News, Firstpost". Firstpost. 18 October 2018.
 22. "Avatar Review". avatarreview.ne. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2013-08-05.
 23. "Eclectica". eclectica.org. பார்க்கப்பட்ட நாள் 2013-08-05.
 24. "QLRS". qlrs.com. பார்க்கப்பட்ட நாள் 2013-08-05.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேக்னா_பந்த்&oldid=3680946" இலிருந்து மீள்விக்கப்பட்டது