உள்ளடக்கத்துக்குச் செல்

மென்கோந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோந்தால் சிக்கிய ஈயைச் சுற்றி வளைந்த இலையுடன் கூடிய பனிப்பூண்டு .


மென்கோந்து (muscilage) சளிக்கோந்து என்பது கிட்டத்தட்ட அனைத்து தாவரங்கள், சில நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படும் தடிமனான, பசையுடைய பொருளாகும். இந்த நுண்ணுயிரிகளில் முகிழுயிரிகள் அடங்கும், அவை கோந்தைத் தம் இயக்கத்திற்கு பயன்படுத்துகின்றன. இவை இயங்கும் திசை கோந்தின் சுரப்புக்கு எதிராக எப்போதும் இருக்கும். [1] இது ஒரு துருவ இனிமப் புரதமும் புறப்பலசர்க்கரையும் ஆகும். தாவரங்களில் உள்ள கோந்து, நீர்,உணவு தேக்கவும், விதை முளைத்தலுக்கும் சதைப் படலங்கள் தடிக்க செய்வதிலும் பங்கு வகிக்கிறது. கற்றாழை, ஆளி விதைகள் கோந்துக்கான வளங்களாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Modes of Locomotion in Protists: 5 Modes" (in en-US). Biology Discussion. 2016-09-06. http://www.biologydiscussion.com/protists/modes-of-locomotion-in-protists-5-modes/52116. 
  2. "Mucilage cell, cactus". www.sbs.utexas.edu. Archived from the original on 2017-06-15. பார்க்கப்பட்ட நாள் 2017-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மென்கோந்து&oldid=3955288" இலிருந்து மீள்விக்கப்பட்டது