மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலம்
Jump to navigation
Jump to search
மெந்தாவாய் தீவுகள் பதிலாட்புலம் Mentawai Islands Regency கபுபாத்தன் கெப்புலாவுவான் மெந்தாவாய் | |
---|---|
பிராந்தியம் | |
![]() | |
நாடு | ![]() |
மாகாணம் | மேற்கு சுமாத்திரா |
தலைநகர் | துவா பெஜட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 6,011.35 km2 (2,321.00 sq mi) |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 38,300 |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் (ஒசநே+7) |
மெந்தாவாய் தீவுகள் (Mentawai Islands) இந்தோனேசியாவில் சுமாத்திராவின் மேற்கில் அமைந்துள்ள தீவுக்கூட்டம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 70 தீவுகளும் சிறுதீவுகளும் உள்ளன. சிபெருத் (4,030 கிமீ²) என்பது இதில் உள்ள பெரிய தீவாகும். சிப்பூரா, வடக்கு பகாய், தெற்கு பகாய் ஆகியன இங்குள்ள ஏனைய முக்கிய தீவுகள். இத்தீவுகள் சுமாத்திராக் கரையில் இருந்து கிட்டத்தட்ட 150 கிமீ தூரத்தில் மெந்தாவாய் நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. இத்தீவுகளின் பழங்குடி மக்கள் மெந்தாவாய் மக்கள் என அழைக்கப்படுகின்றனர். சுற்றுலாத் துறைக்கு, குறிப்பாக கடலலை சறுக்கல் விளையாட்டுக்கு இத்தீவுகள் பேர் பெற்றவை.