மெதில் ஆரஞ்சு
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
சோடியம் 4-{[4-(டைமெதில்அமினோ)பினைல்பினைல்]டையசீனைல்}பென்சீன்-1-சல்போனேட்டு | |
வேறு பெயர்கள்
சோடியம் 4-[(4-டைமெதில்அமினோ)பினைல்அசோ]பென்சீன்சல்போனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
547-58-0 ![]() | |
ChemSpider | 16736152 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
SMILES
| |
பண்புகள் | |
C14H14N3NaO3S | |
வாய்ப்பாட்டு எடை | 327.33 g·mol−1 |
அடர்த்தி | 1.28 கி/செமீ3, திண்மம் |
உருகுநிலை | |
கொதிநிலை | சிதைவுறுகிறது |
0.5 கி/100 மிலி (20 °செ) | |
கரைதிறன் | டைஎதில் ஈதரில் கரைவதில்லை[1] |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சுத்தன்மையுடையது (T) |
GHS pictograms | ![]() |
GHS signal word | அபாயகரமானது |
H301 | |
P308, P310 | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
60 மிகி/கிகி (rat, oral) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
மெதில் ஆரஞ்சு (Methyl orange), இதன் தெளிவான மற்றும் தனித்த நிற மாற்றத்தின் காரணமாக தரம் பார்த்தலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு pH நிறங்காட்டி ஆகும். இந்த நிறங்காட்டியின் நிறமானது ஒரு சராசரியான திறனுடைய அமிலத்தின் pH மதிப்பில் நிறமாற்றம் அடைவதால் அமில கார தரம் பார்த்தலில் இது வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு பொதுவான நிறங்காட்டியைப் போலல்லாமல், மெதில் ஆரஞ்சானது நிறமாற்றத்திற்காான முழுமையான நிறப்பட்டையைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் இது மிக நுணுக்கமான இறுதி நிலையைக் கொண்டுள்ளது. மெதில் ஆரஞ்சு அமில ஊடகத்தில் சிவப்பு நிறத்தையும், கார ஊடகத்தில் மஞ்சள் நிறத்தையும் காட்டுகிறது.
நிறங்காட்டி நிறங்கள்[தொகு]
திரவத்தின் அமிலத்தன்மை குறையக் குறைய மெதில் ஆரஞ்சு தனது நிறத்தை சிவப்பிலிருந்து ஆரஞ்சு நிறத்திற்கும் இறுதியாக, மஞ்சள் நிறமாகவும் மாறுகிறது. அமிலத்தன்மை கூடும் நேர்வில் மேலே சொன்ன நிற மாற்றம் தலைகீழாகவும் மாறுகிறது. முழுமையான நிற மாற்றமும் அமில நிலையிலேயே நிகழ்கின்றன. அமிலத்தில் இது சிவப்பாகவும், காரத்தில் இது மஞ்சளாகவும் காணப்படும். நீரில் 25 °C (77 °F) வெப்பநிலையில் மெதில் ஆரஞ்சின் pKa மதிப்பானது 3.47 ஆக உள்ளது.[2]
இதர நிறங்காட்டிகள்[தொகு]
மாற்றம் செய்யப்பட்ட மெதில் ஆரஞ்சு எனப்படுவது மெதில் ஆரஞ்சு மற்றும் சைலீன் சையனால் ஆகியவற்றின் கரைசலைக் கொண்டுள்ள ஒரு நிறங்காட்டி ஆகும். அமிலத் தன்மை குறையக் குறைய இதன் நிறம் சாம்பல் கலந்த கரு ஊதாவிலிருந்து பச்சையை நோக்கி மாறுகிறது.
பாதுகாப்பு[தொகு]
மெதில் ஆரஞ்சு மரபணு மாற்றப் பண்புகளைக் கொண்டுள்ளது.[1] நேரடியாகத் தொடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும் காண்க[தொகு]
- pH நிறங்காட்டி
- மெதில் சிவப்பு
- பாசிச்சாயம்
- பினால்ப்தலீன்
- புரோமோமெதில் ஊதா
- பொது நிறங்காட்டி