பாசிச்சாயம்
பாசிச்சாயம் (litmus) என்பது நீரில் கரையக் கூடிய பல சாயங்களின் கலவையாகும். இது இலைக்கனிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் அமிலத்தன்மையைச் சோதிக்க பயன்படும் பழங்கால முறையை தயாரிக்க வடிகட்டித்தாளில் உறிஞ்சப்படுகிறது. அமிலத்தன்மையில் நீல பாசிச்சாயத்தாள் சிவப்பாக மாறும். காரத் தன்மையில், சிவப்பு பாசிச்சாயத்தாள் நீல நிறமாகும். காரகாடித்தன்மைச் சுட்டெண் எல்லை 4.5-8.3 இல் 25 °C இல் இந்த நிறமாற்றம் ஏற்படும். நடுநிலையான பாசிச்சாயத்தாளின் நிறம் ஊதா ஆகும்.[1] இந்தப் பாசிச்சாயத்தை நீரில் கலந்தும் பயன்படுத்தலாம். அமிலம் இருப்பின் அந்தக் கலவை சிவப்பாகவும், காரமாயின் நீலமாகவும் இருக்கும்.
இந்த பாசிச்சாயக் கலவை சிஏஎசு எண் 1393-92-6 ஐக் கொண்டிருப்பதுடன் 10 இலிருந்து 15 வரையான சாயங்களையும் கொண்டுள்ளது.
பாசிச்சாயம் (pH சுட்டி) | ||
4.5 இலும் குறைவான pH | 8.3 இலும் அதிகமான pH | |
4.5 | ↔ | 8.3 |
வரலாறு[தொகு]
பாசிச்சாயம் கி.பி 1300 அளவில் முதன் முறையாக எசுப்பானிய இரசவாதி அர்நால்டஸ் டி வில்லா நோவா அவர்களால் பயன்படுத்தப்பட்டது.[1] பதினாறாம் நூற்றாண்டிலிருந்து நீலச்சாயம் இலைக்கனில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு நெதர்லாந்தில் பயன்படுத்தப்பட்டது.