மெட்வே
மெட்வே | |
---|---|
![]() | |
இணையதளம் | www |
மெட்வே (Medway) என்பது தென்கிழக்கு இங்கிலாந்தில் கென்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கென்ட் மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தாலும், சுய ஆட்சியில் இயங்குகிறது.[1]
முக்கிய இடங்கள்[தொகு]
உரோச்சட்டர் தேவாலயம்[தொகு]

கி.பி.604 இல் கட்டப்பட்ட உரோச்சட்டர் தேவாலயம், இங்கிலாந்தின் இரண்டாவது பழமை வாய்ந்த தேவாலயம் ஆகும். ஆங்கிலத்தில் மிகப் பழமையான டெஃடுசு ரோஃப்பின்சசு என்ற சுவடு 12 ஆம் நூற்றாண்டில் இங்குதான் எழுதப்பட்டது.
உரோச்சட்டர் கோட்டை[தொகு]
கி.பி. 1088 இல் கட்டப்பட்ட உரோச்சட்டர் கோட்டை இங்கிலாந்தின் மிகவும் உயரமான நார்மன் அரண் ஆகும்.
அப்னர் கோட்டை[தொகு]

முதலாம் எலிசபத்து இராணியின் கட்டளையால் கி.பி. 1559 இல் அப்னர் கோட்டை கட்டப்பட்டது.
அம்கெர்ச்ட் கோட்டை[தொகு]
கி.பி. 1667 மெட்வே மற்றும் சாத்தம் கப்பற்பட்டறை மீதான டச்சுத் தாக்குதலுக்குப் பின்னர், சாத்தம் கப்பற்பட்டறையின் மீதான தரைவழித் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில் அம்கெர்ச்ட் கோட்டை கட்டப்பட்டது.[2]
கிழக்குவாயில் வீடு[தொகு]
கி.பி. 1590 ல் சாத்தம் கப்பற்பட்டறையில் இயங்கிவந்த துணைநிலைப் படை அதிகாரிகளின் கீழ் இயங்கிய எழுத்தர்களால் (Clerk of the Cheque) கட்டப்பட்டது. சார்லஸ் டிக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்ட பிக்விக் பேப்பர்கள் என்ற புதினத்திலும் இவ்விடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
குயில்ட்கால்[தொகு]
கி.பி. 1687 இல் கட்டப்பட்ட குயில்ட்கால் உள்ளாட்சிக் கட்டடம், தற்போது மெட்வேயின் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.
சாத்தம் கப்பற்பட்டறை[தொகு]

சாத்தம் கப்பற்பட்டறை கி.பி 1567 மற்றும் கி.பி. 1572 க்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட கப்பல் கட்டுமானத் தளம் ஆகும்[3].
முக்கிய நபர்கள்[தொகு]
வில்லியம் ஆடம்சு[தொகு]
வில்லியம் ஆடம்சு (மாலுமி) என்பவர் ஜப்பானை முதன் முதலில் சென்றடைந்த இங்கிலாந்து நாட்டவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில், சில்லிங்காம் என்ற சிற்றூரில் பிறந்தார்.
சார்லஸ் டிக்கின்ஸ்[தொகு]
சார்லஸ் டிக்கின்ஸ் விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ் பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Campaigning to regain city status for Medway towns". http://news.bbc.co.uk/local/kent/hi/people_and_places/history/newsid_8584000/8584813.stm. பார்த்த நாள்: 2015-08-05.
- ↑ "Origins of Fort Amherst". http://www.fortamherst.com/index.php/about-fort-amherst/history. பார்த்த நாள்: 2015-08-12.
- ↑ MacDougall, Philip (2012). "The Early Years". Chatham Dockyard: The Rise and Fall of a Military Industrial Complex. The History Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780752487762.