உள்ளடக்கத்துக்குச் செல்

சாத்தம் கப்பற்பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாத்தம் கப்பற்பட்டறை

சாத்தம் கப்பற்பட்டறை (Chatham Dockyard) என்பது வடகிழக்கு இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் உள்ள சாத்தம் என்னும் ஊரின் வழியே பாயும் மெட்வே ஆற்றங்கரையில் அமைந்துள்ள கப்பல் கட்டுமானத் தளம் ஆகும். சாத்தம் கப்பற்பட்டறையின் வரலாறு 1547 இல் எட்டாம் கென்றி மன்னனின் கப்பற்படைக்காகக் கட்டப்பட்ட 3 களஞ்சியங்களிலிருந்து துவங்குகிறது.[1] இங்கிலாந்தில் உள்ள ஆறு அரச கப்பல் தளங்களில், சாத்தம் கப்பற்பட்டறையும் ஒன்று.[2]

தோற்றம்

[தொகு]

சாத்தம் கப்பற்பட்டறை 1567 ஆம் ஆண்டில் முதலாம் எலிசபெத் இராணியால் அரச கப்பற்பட்டறையாக மாற்றப்பட்டது.[3]

நீர்மூழ்கிக் கப்பல்கள்

[தொகு]
சாத்தம் கப்பற்பட்டறையில் கட்டப்பட்ட எச். எம். எசு. சி17 இரக நீர்மூழ்கி

சாத்தம் கப்பற்பட்டறை 1907 இல் இருந்து நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கத் துவங்கியது. முதலாவது கட்டப்பட்டது சி17 என்ற கடலோர நீர்மூழ்கியாகும். கடைசியாகக் கட்டிமுடிக்கப்பட்டது 1968 இல் கனேடிய அரச கடற்படைக்கான ஒபேரியன் வகை ஓக்கநாகன் ஆகும். இத்தளத்தில் மொத்தம் 20 வகைகளைச் சேர்ந்த 57 நீர்மூழ்கிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

நிரந்தரமாக மூடிய பின்னர்

[தொகு]

சாத்தம் கப்பற்பட்டறை, 1980 வரை அரச கப்பற்படைக் கப்பல்களை பழுதுநீக்கும் பணிகளையும் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டுவந்தது. பின்னர் 1981 இல் நாட்டின் பாதுகாப்புத் தகைமைகளின் ஆய்வின் படி, சாத்தம் கப்பற்பட்டறை நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 1984இல் இதன் இயக்கம் முற்றிலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் விளைவாக 7000 நேரடி வேலையிழப்புகளும், அதே போல் இருமடங்கு மறைமுக வேலையிழப்புகளும் நேரிட்டன.

பட்டறையை மூடுகையில், அது மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போதைய தளத்தின் வெளிப்பகுதி, வணிகத் துறைமுகமாக விற்கப்பட்டது. மத்தியப் பகுதி கடல்சார் சாத்தம் என்று பெயர் மாற்றம் பெற்று, குடியிருப்பு வளர்ச்சிக்கும் பொருளாதார மீளுருவாக்கத்திற்கும் என ஒதுக்கப்பட்டது. சார்சியன் கப்பற்பட்டறை என்று அழைக்கப்பட்ட மற்றப் பகுதி, சாத்தம் கப்பற்பட்டறையின் வரலாற்றைப் பாதுகாக்கவும், அதன் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு சுயாதீன அறக்கட்டளையாக மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Woodward, Rachel (2011). Military Geographies. New York, NY: John Wiley & Sons. p. 63. ISBN 978-1-4443-9987-5.
  2. Macdonald, Guy (2003). England. London: Cadogan Guides. p. 166. ISBN 978-1-86011-116-7.
  3. Khan, Mark (2014). "7". Kent at war, 1939–1945 : rare photographs from wartime archives. Barnsley, South Yorkshire: Pen & Sword Military. ISBN 978-1-78346-346-6.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தம்_கப்பற்பட்டறை&oldid=2082404" இலிருந்து மீள்விக்கப்பட்டது