உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் ஆடம்சு (மாலுமி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் ஆடம்சு
வில்லியம் ஆடம்சு
வில்லியம் ஆடம்சு
பிறப்பு(1564-09-24)செப்டம்பர் 24, 1564
சில்லிங்காம், கென்ட்
இறப்புமே 16, 1620(1620-05-16) (அகவை 55)
கிராடோ, நாகசாகி
தேசியம்இங்கிலாந்து
மற்ற பெயர்கள்அஞ்சின் மியுரா (三浦按針)
பணிமாலுமி
அறியப்படுவதுசப்பானுக்கு சென்ற முதல் இங்கிலாந்து மாலுமி
வாழ்க்கைத்
துணை
மேரி கைன், ஓயுக்கி
பிள்ளைகள்மகள் - டெலிவரன்சு, மகன்

வில்லியம் ஆடம்சு (William Adams, 24 செப்டம்பர் 1564 – 16 மே 1620) என்பவர் ஆங்கிலேயக் கப்பலோட்டி ஆவார். 1600 ஆம் ஆண்டில் சப்பானைச் சென்றடைந்த முதலாவது ஆங்கிலேயர் இவராவார். 1598 இல் சப்பானுக்கு சென்ற ஐந்து டச்சுக் கிழக்கிந்திய நிறுவனக் கப்பல்களில் தப்பிப் பிழைத்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆடம்சு சப்பானிலேயே தங்கியிருந்து முதலாவது மேற்கத்தைய சாமுராய் என்ற பெருமையைப் பெற்றார்.

பிறப்பு[தொகு]

வில்லியம் ஆடம்சு இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்தில் உள்ள சில்லிங்காம் என்ற சிற்றூரில் பிறந்தவர். சில்லிங்காமில் உள்ள தூய மரிய மதலேனாள் ஆலயத்தில் 24 செப்டம்பர் 1564 அன்று திருமுழுக்கு பெற்ற இவரது திருமுழுக்குப் பதிவே இவர் மெட்வேயில் பிறந்தார் என்பதற்கு உள்ள ஒரே சான்று.[1]

வில்லியம் ஆடம்சுக்கு தோமாசு என்ற ஒரு சகோதரர் இருந்தார். அவர் மகு மற்றும் டி கார்டசு போன்ற கப்பல்களில் பணியாற்றி, வட அமெரிக்க பசிபிக் பெருங்கடலில் இறந்தார்.[2]

இளமைப்பருவம்[தொகு]

வில்லியம் ஆடம்சின் தந்தை ஜான் இறந்தபின், தனது 12 வது வயதில் தேம்சு நதிக்கரையில் உள்ள லைம்கவுசு என்ற இடத்தில் நிக்கோலாசு டிக்கினசு என்பவரின் கப்பல் கட்டுமானத் தளத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்து, தன் 24 வயது வரை இங்கு பணியாற்றினார்.

வில்லியம் ஆடம்சு, ஆகத்து 1589 இல் மேரி கைன் என்பவரை ஃடெபினி ஆலயத்தில் வைத்து திருமணம் செய்தார். இவர்களுக்கு டெலிவரன்சு என்ற மகளும், ஒரு மகனும் என இரு குழந்தைகள் இருந்தனர்.

ஆடம்சுக்கு ஓயுக்கி என்று ஒரு சப்பானிய மனைவியும் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Barreveld, Dirk (2001). The Dutch discovery of Japan : the true story behind James Clavell's famous novel Shogun. San Jose etc: Writers Club Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-595-19261-8.
  2. Corr, William (1995). Adams the pilot : the life and times of Captain William Adams, 1564-1620. Folkestone, Kent: Japan Library. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-873410-44-8.

வெளியிணைப்புகள்[தொகு]

  1. மரியா மதலேனாள் ஆலயம் - சில்லிங்காம், கென்ட் பரணிடப்பட்டது 2012-02-20 at the வந்தவழி இயந்திரம்
  2. ஃடெபினி ஆலயம், இலண்டன்