மெக்மோகன் கோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இமயமலையில் இந்திய-சீனாவின் எல்லையாக அமைந்த மெக்மோகன் கோடு. (சிவப்பு நிறத்தில் உள்ளது சர்ச்சைக்குரிய பகுதிகள்)
ஹென்றி மெக்மோகன்

மெக்மோகன் கோடு (McMahon Line) திபெத் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே ஏற்பட்ட 1914 சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத்திற்கும் இடையே, ஆங்கிலேயப் புவியியலரான ஹென்றி மெக்மோகன் என்பவரால் வரையப்பட்ட எல்லைக்கோடாகும்.[1] இந்தியாவின் கிழக்கு இமயமலை பகுதியில் இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப் பகுதிகளை வரையறுக்கும் எல்லைக் கோடு வரைந்தவர் மெக்மோகன் ஆவார்.

தற்போது இந்தியாசீனா நாடுகளுக்கு எல்லையாக அமைந்த மெக்மோகன் கோடு இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.[2]

சர்ச்சைக்குரிய மெக்மோகன் எல்லைக்கோடு குறித்து 1962இல் இந்திய சீனப் போர் ஏற்பட வழி வகுத்தது. இப்போரில் சீனா அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளைக் கைப்பற்றியது.[3]

வரைபடங்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chellaney, Brahma. "India-China: Let facts speak for themselves," The Economic Times (Mumbai). 17 September 2010; retrieved 2012-5-12.
  2. "China rejects report on border talks with India," Xinhua News Agency, August 7, 2009; Guruswamy, Mohan. "The Battle for the Border," Rdiff.com (India). 23 June 2003; retrieved 2012-5-12.
  3. "A Himalayan rivalry," The Economist (UK). 19 August 2010; retrieved 2012-5-12.

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்மோகன்_கோடு&oldid=3869246" இலிருந்து மீள்விக்கப்பட்டது