மூலா நாராயண சுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலா நாராயண சுவாமி
பிறப்புஅண். 1912
தாடிபத்திரி, சென்னை மாகாணம், இந்தியா
இறப்பு(1950-08-20)20 ஆகத்து 1950 (aged 38)[1]
தாடிபத்திரி, சென்னை மாகாணம், இந்தியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர்

மூலா நாராயண சுவாமி (Moola Narayana Swamy) ( சுமார் 1912 – 20 ஆகஸ்ட் 1950) ஓர் இந்தியத் தொழிலதிபரும், தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார். இராயலசீமை வங்கி வங்கி, இராயலசீமை டெக்ஸ்டைல்ஸ், கடப்பா செராமிக்ஸ், கடப்பா எலக்ட்ரிக் கம்பெனி, எண்ணெய் ஆலைகள், பால் கூட்டுறவுச் சங்கங்கள், சாராயம் ஒப்பந்தம், மார்க்கெட் யார்டுகள் போன்ற பல வணிகங்களை இவர் வைத்திருந்தார். இவர் "ஆந்திர பிர்லா" என்ற பெயராலும் அறியப்பட்டார். [1] [2]

இவர், இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வாகினி ஸ்டுடியோவை நிறுவினார். இது அந்த நேரத்தில் ஆசியாவின் மிகப்பெரிய திரைப்பட படபிடிப்பு அரங்கங்களில் ஒன்றாகும். பிற்காலத்தில், பொம்மிரெட்டி நாகிரெட்டி இந்த நிறுவனத்தினை வாங்கினார். பின்னர் இதை விஜயா வாகினி ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் செய்தார்.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 . 2021-08-21. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  2. . 2009-12-07. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)
  3. "The story in a road name - CHEN". The Hindu. 2009-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  4. "Telugu Cinema - Research - "Telugu Cinema - past and the present" by Gudipoodi Srihari". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
  5. "Bhatktha Potana (1943) - Anantapur". The Hindu. 2011-12-11. பார்க்கப்பட்ட நாள் 2016-05-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலா_நாராயண_சுவாமி&oldid=3819232" இலிருந்து மீள்விக்கப்பட்டது