உள்ளடக்கத்துக்குச் செல்

மூட்டைப் பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bedbug
Cimex lectularius
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Cimicidae

Kirkaldy, 1909
Genera & இனம்

Genus Cimex

  • Cimex lectularius
  • Cimex hemipterus (C. rotundatus)
  • Cimex pilosellus
  • Cimex pipistrella

Genus Leptocimex

  • Leptocimex boueti

Genus Haematosiphon

  • Haematosiphon inodora

Genus Oeciacus

  • Oeciacus hirudinis
  • Oeciacus vicarius

Genus Afrocimex

  • Afrocimex constrictus

மூட்டைப் பூச்சி ஒரு மிகச்சிறிய இரவுநேர பூச்சியாகும். இதை பொதுவாக மனித அல்லது வெப்ப இரத்த பிராணிகளின் இரத்தத்தை குடித்து வாழும் உயிரினம். இவை பொதுவாக படுக்கைகள், மரப்பொருட்களின் இடுக்குகளில் வாழ்கின்றன.

வகைகள்[தொகு]

பொதுவான மூட்டைப்பூச்சி வகையான (Cimex lectularius) மனிதன் வாழும் சூழ்நிலைகளில் வாழும். மித வெப்பமண்டல பிரதேசங்களில் உலகம் முழுதும் வாழும் இவை மனித இரத்தத்தைப் பருகி உயிர் வாழ்பவை. மற்றொரு வகை (Cimex hemipterus) வெப்பமண்டல பகுதிகளில் வாழ்பவை. இவை மனிதன் மட்டுமின்றி, பறவைகளையும், வௌவால்களையும் தாக்கக் கூடியவை. மேற்கு ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க பகுதிகளில் காணக்கூடிய வகை(Leptocimex boueti) வௌவால்களையும் மனிதனையும் தாக்குபவை. Cimex pilosellus மற்றும் Cimex pipistrella என்ற இரண்டு வகையானவை பொதுவாக வௌவால்களை அதிகமாக தாக்க கூடியவை. வட அமெரிக்காவில் வாழும் (Haematosiphon inodora) வகை மூட்டைப்பூச்சிகள் பொதுவாக பறவைகளைத் தாக்குபவை.

உடலமைப்பு[தொகு]

வளர்ந்த மூட்டைப்பூச்சி சிவந்த அரக்கு நிறத்தில் தட்டையாக, முட்டை வடிவத்தில் இறக்கையில்லா உடலமைப்பினைக் கொண்டது. மிக நுண்ணிய முடிகளை உடல் முழுதும் கொண்டிருக்கும். 4-5 மிமீ வரை நீளம் வரை வளரும். புதிதாய் முட்டை பொரித்த மூட்டைப்பூச்சிகள் வெளிறிய நிறத்தில் ஒளிபுகும் வண்ணம் தோலைக் கொண்டதாக இருக்கும். மூட்டைப்பூச்சிகளை மனிதக்கண்களால் காணமுடியாது என்ற தவறானதொரு நம்பிக்கை உண்டு[சான்று தேவை].

உண்ணும் முறைகள்[தொகு]

பொதுவாக மற்ற உணவு ஏதும் கிடைக்காத பட்சத்தில்தான் மனித இரத்தத்தைக் குடிக்க முயல்கின்றன. மனிதன் வெளியிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு, உறங்கும்போது வெளிப்படும் வெப்பம் போன்றவை இவற்றை மனிதனிடம் ஈர்க்கின்றன.

இப்பூச்சிகள் இரத்தத்தை உறிவதற்கு மனிதனின் சதையில் இரண்டு குழல்களை செலுத்துகின்றன. ஒரு குழல் மூலம் தனது உமிழ்நீரை செலுத்திட, அதில் வலியை மறக்கடிக்கச் செய்யும் இரசாயனங்கள் இருப்பதால், அவை கடிக்கும் வலியினை மனிதன் உணருவதில்லை. ஏறத்தாழ ஐந்து நிமடத்திற்கு இரத்தத்தை உறிஞ்சிய பின், அவை தமது இருப்பிடத்திற்கு சென்று பதுங்கிக் கொள்கின்றன.

மனிதனுக்கு ஏற்படக் கூடிய உடல்நலக் கேடுகள்[தொகு]

இவை கடிப்பதால், மனிதன் தோலில் அரிப்புகளும், ஒவ்வாமையால் ஏற்படும் தோல் தொடர்பான வியாதிகளும் ஏற்பட வாய்ப்புண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூட்டைப்_பூச்சி&oldid=3395300" இலிருந்து மீள்விக்கப்பட்டது