மூடநம்பிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வீட்டில் வாழ்பவரை எந்தவொரு ஆபத்தில் இருந்தும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் hamsa என்ற பொருள்


மூடநம்பிக்கை என்றால் ஒரு விடயத்தை அல்லது பொருளை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புதல் ஆகும் பிறரையோ, சமூகத்தையோ, நம்புவரையோ மூடநம்பிக்கை கெடுதல் தரும் முறையில் பாதிக்குமானால் அந்த மூடநம்பிக்கையை விழிப்புணர்வு கொண்டு தவிர்த்தல் அல்லது தடைசெய்தல் அவசியம். மூடநம்பிக்கைகள் நம்புவர் உட்பட யாரையும் கெடுதல் தரும் முறையில் பாதிக்காவிட்டால் அதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்தத் தேவையில்லை. சில மூடநம்பிக்கைகள் அடிப்படையில் உண்மையற்று இருப்பினும், நம்பிக்கைகள் தருவதன் மூலம் நன்மைகளைத் தரக்கூடியன. சில மூடநம்பிக்கைகள் பொழுதுபோக்காக அமைகின்றன. எதிர்காலத்தை கூறுவதாக கூறும் சோதிடங்கள் பல மூடநம்பிக்கைகளே.

இவற்றையும் பார்க்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூடநம்பிக்கை&oldid=1904022" இலிருந்து மீள்விக்கப்பட்டது