உள்ளடக்கத்துக்குச் செல்

மு. கற்பக விநாயகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாண்புமிகு நீதிபதி
மு. கற்பக விநாயகம்
ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி
பதவியில்
17 செப்டம்பர் 2006 – 15 மே 2008
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 மே 1946 (1946-05-16) (அகவை 78)
தேவக்கோட்டை
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
பெற்றோர்
  • கே. முத்துசாமி (தந்தை)
கல்விபி. ஏ., எல். எல். பி.
முன்னாள் கல்லூரிஅழகப்பா அரசுக் கல்லூரி, காரைக்குடி, சென்னை சட்டக் கல்லூரி

மு. கற்பக விநாயகம் (M. Karpaga Vinayagam)(பிறப்பு 16 மே 1946) என்பவர் இந்திய நீதிபதி, தமிழ் அறிஞர் மற்றும் சார்கண்ட்டு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

விநாயகம் 1946ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சட்டப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1969ஆம் ஆண்டு பொருளாதாரத்தில் இளநிலை தேர்ச்சிக்குப் பின்னர் எல். எல். பி. பட்டத்தினை 1972-ல் சென்னை சட்டக் கல்லூரியில் பெற்றார்.[1]

பணி

[தொகு]

விநாயகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கறிஞராகப் பயிற்சியைத் தொடங்கினார். தொடர்ந்து ஏழு ஆண்டுகள் உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்குகளுக்காக ஆஜரானார். 1993ஆம் ஆண்டு தில்லி சட்ட இதழான நடப்பு குற்ற அறிக்கையின் ஆசிரியரானார். விநாயகம் 1996ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். இவர் 2006 செப்டம்பர் 17 அன்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதியரசர் விநாயகம் தனது நீதித்துறை வாழ்க்கையைத் தவிரச் செம்மொழி மற்றும் பழமையான தமிழ் மொழியின் மீது அபரிமிதமான அறிவைக் கொண்டவர் ஆவார். இவர் பண்டைய காலத்தில் குற்றவியல் சட்டம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.[2] ஓய்வுக்குப் பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றினார். நவம்பர் 2008 இல், புது தில்லி மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hon'ble Mr. Justice M.Karpaga Vinayagam". பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
  2. "Hon'ble Mr. Justice M.Karpaga Vinayagam". பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
  3. "Justice M. Karpaga Vinayagam was reappointed Chairperson of Appellate Tribunal". பார்க்கப்பட்ட நாள் 24 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._கற்பக_விநாயகம்&oldid=3994812" இலிருந்து மீள்விக்கப்பட்டது