முவான்சா பட்டைதலை பாறை அகாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முவான்சா பட்டைதலை பாறை அகாமா
ஆண், தன்சானியாவில்
பெண், தன்சானியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
அகாமா
இனம்:
அ. முவான்சே
இருசொற் பெயரீடு
அகாமா முவான்சே
(லேவர்ட்ஜே, 1923)
வேறு பெயர்கள்

அகாமா அகாமா முவான்சே
அகாமா பிளானிசெப்சு முவான்சே

முவான்சா பட்டைதலை பாறை அகாமா (Mwanza flat-headed rock agama)(அகாமா முவான்சே) அல்லது சிலந்தி மனித அகாமா என்பது தன் நிறத்தின் காரணமாக, தன்சானியா, உருவாண்டா மற்றும் கென்யாவில் காணப்படும் அகமிடே குடும்பத்தில் காணப்படும் ஒரு ஓந்திச் சிற்றினம் ஆகும்.[2]

இது வறண்ட பாலைவனங்களில் வாழ்கிறது. பெரும்பாலும் பகல் வெப்பத்தில் பாறைகள் அல்லது எச்சக்குன்று மீது கூடுவதைக் காணலாம். ஆணின் தலை, கழுத்து மற்றும் தோள் பகுதிகள் பிரகாசமான சிவப்பு அல்லது ஊதா நிறத்திலும், உடல் கருநீல நிறத்திலும் காணப்படும். பெண் ஓந்தி பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் உள்ளது. பிற ஓந்தி சிற்றினங்களின் பெண் அகமாக்களிலிருந்து இதனை வேறுபடுத்துவது கடினம். இனம் காண்பதில், இந்த ஓந்தி பெரும்பாலும் சிவப்பு தலை கொண்ட பாறை அகமாவுடன் (அகாமா அகாமா) குழப்பமுடையது.[3] ஆண் ஓந்திகள் குறைந்தது ஐந்து பெண் கூட்டாளிகள் இனம் சேர குழுவாகச் செயல்படும். ஆண் ஒரு பெண் ஓந்தியினை தன்வசப்படுத்திய உடன் தன்னுடைய கவர்ச்சியான தலையை அசைத்து அசைத்து ஆட்டும்.[4]

சிறுவர் கதைப் புத்தக பெரும் கதாநாயகன்ஸ்பைடர் மேனை ஒத்திருக்கும் ஆணின் நிறத்தின் காரணமாக இந்த சிற்றினம் செல்லப் பிராணியாக மாறியுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Menegon, M.; Spawls, S.; Wagner, P.; Beraduccii, J. (2014). "Agama mwanzae". IUCN Red List of Threatened Species 2014: e.T170371A44810595. doi:10.2305/IUCN.UK.2014-3.RLTS.T170371A44810595.en. https://www.iucnredlist.org/species/170371/44810595. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Agama mwanzae at the Reptarium.cz Reptile Database
  3. Spawls, S.; Howell, K. M.; Drewes, R. C. (2006). Reptiles and Amphibians of East Africa. Princeton: Princeton University Press. 
  4. Kennedy, A. S., & Kennedy, V. (2014). Animals of the serengeti: And ngorongoro conservation area. Princeton, UNITED STATES: Princeton University Press.
  5. "Spider-Man lookalike lizard is latest exotic pet craze". The Telegraph. 21 September 2009. https://www.telegraph.co.uk/news/newstopics/howaboutthat/6213807/Spider-Man-lookalike-lizard-is-latest-exotic-pet-craze.html.