முளையவியல்
Appearance

முளையவியல் என்பது கருக்கட்டல் என்னும் செயல்முறை மூலம் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவானது, குழந்தை பிறப்பிற்கு முன்னதாக, தாயின் உடலினுள் ஆரம்ப நிலையில் முளையமாகவும், பிந்திய நிலையில் முதிர்கருவாகவும் விருத்தியடைந்து வரும் முறைகளை விளக்கும் அறிவியலாகும்.
விந்தும், முட்டையும் இணைந்து உருவாகும் கருவணு, கலப்பிரிவு மூலம் பிளவுக்குட்பட்டு, பல்கிப் பெருகி அதிக உயிரணுக்களைக் கொண்ட துளையுள்ள பந்து போன்ற கருக்கோளமாக மாற்றமடையும். தொடர்ந்து ஏற்படும் பல வளர்ச்சி நிலைகளால் ஒரு முழு உயிரியாக மாற்றம் பெறும் முறை முளையவியல் எனப்படுகிறது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சி". Retrieved 2 ஏப்ரல் 2014.
- ↑ "Embryology". Retrieved 24 பெப்ரவரி 2018.