உள்ளடக்கத்துக்குச் செல்

முற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்நாடகத்தில் ஒரு வீட்டு முற்றம்

முற்றம் (Courtyard) என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீடுகளின் மையத்தில் உள்ள ஒரு சதுர வடிவ திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு நேர் எதிரே இருக்கும். முற்றத்தின் முகப்பு, வீட்டின் எல்லா அறைகளையும் இணைப்பதாகவும் இருக்கும். இந்த முற்றம் விட்டில் இயற்கை வெளிச்சம் புகவும் காற்றோட்டமாக இருக்கவும் உதவும் வகையில் அமைந்திருக்கும்.[1] சிலர் இந்த முற்றத்தில் துளசி மாடத்தை வைத்திருப்பர். முற்றம் தானியங்களை உலர்த்தவும் துணிகளை காயப்போடவும் உதவும். இந்த முற்றங்கள செட்டிநாடு வீடு, குத்தூ வீடு, நாலுகெட்டு வீடு, நாற்சதுரமனை, நாற்சார் வீடு, மந்துவா வீடுகள் போன்ற தென் இந்திய வீடுகளில் அமைக்கப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "முற்றம் எப்படி இருந்தால் அழகு?". கட்டுரை. தினகரன். Archived from the original on 2015-06-09. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=முற்றம்&oldid=3717433" இலிருந்து மீள்விக்கப்பட்டது