உள்ளடக்கத்துக்குச் செல்

முபாரக் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முபாரக் அலி (Mubarak Ali உருது: مُبارَک علی ‎ ), (பிறப்பு: ஏப்ரல் 21, 1941) ஒரு பாகிஸ்தான் வரலாற்றாசிரியர், ஆர்வலர் மற்றும் அறிஞர் ஆவார்.[1] முபாரக் அலி வரலாற்று புத்தகங்களை ஆட்சியாளர்களிடமிருந்து அல்ல, வெகுஜனங்களின் பார்வையில் எழுத வேண்டும் என்று கூறுகிறார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்

[தொகு]

முபாரக் அலி டோங்க், ராஜ்புட்டனாவின் இப்போது பிரித்தானியாவின் இந்தியாவின் ராஜஸ்தானில் ஏப்ரல் 21, 1941 அன்று பிறந்தார். முபாரக் அலி மற்றும் அவரது குடும்பத்தினர் 1952 இல் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தனர்.[2] முபாரக் அலி 1963 ஆம் ஆண்டில் ஜாம்ஷோரோவின் சிந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்று பிரிவில் எம்.ஏ பட்டம் பெற்றார். 1972 ஆம் ஆண்டில் உயர் படிப்பைத் தொடர லண்டன் சென்றார். பின்னர் ஜெர்மனி சென்றார். 1976 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் போச்சம், ருர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி பட்டம் பெற்றார் . பின்னர் சிந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையின் தலைவரானார். இவர் 1996 வரை லாகூரில் உள்ள கோதே நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். 2005 ஆம் ஆண்டில், தாரிக் (வரலாறு) காலாண்டு இதழின் ஆசிரியராக இருந்த இவர், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கில் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களால் பரவலாக பேட்டி காணப்பட்டார்.[3]

1999 ஆம் ஆண்டில், கோஜ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மும்பையில் ஏற்பாடு செய்த ஒரு கருத்தரங்கில் பேசிய முபாரக் அலி, தனது நாட்டில் நிலவி வரும் வரலாற்று அடிப்படைவாதத்தின் விளைவுகளைக் குறிப்பிட்டார். 1965 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போருக்குப் பிறகு, சில வரலாற்றாசிரியர்களால் பாக்கிஸ்தானில் பண்டைய வரலாறு எவ்வாறு வலியுறுத்தப்பட்டது என்பதை இவர் விவரித்தார்.[1]

சிந்துவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் மற்றும் கோட்டையான ராணி கோட் பற்றிய தேசிய கருத்தரங்கில் பேசிய இவர் , வரலாற்றை வேறு கோணத்தில் படிக்கவும் எழுதவும் வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதில் பழைய மற்றும் பண்டைய இந்தியாவின் படையெடுப்பாளர்களை எப்போதும் சிறந்தவர்கள் அல்லது பெரியவர்கள் என்று பாராட்டப்படக்கூடாது. எனத் தெரிவித்தார். இவர் இந்திய-பாகிஸ்தான் வரலாறு குறித்து ஏராளமான புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இதனால் இவர் ஸ்தாபன எதிர்ப்பு மற்றும் அரசாங்க எதிர்ப்பு சிந்தனையாளர் மற்றும் வரலாற்றாசிரியர் என பரவலாக பாராட்டப்பட்டார். இவர் ஒரு நேர்காணலில் பாகிஸ்தான் மற்றும் அதன் சுதந்திரம் குறித்து இதுவரை உண்மையான வரலாறு எதுவும் எழுதப்படவில்லை. ஸ்தாபன சார்பு வரலாற்றாசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களிடையே நிறைய குழப்பங்கள் உள்ளன. இதுவரை எழுதப்பட் வரலாறுகள் வரலாற்றின் சிதைவு மற்றும் முற்றிலும் சமநிலையற்றவை எனத் தெரிவித்தார் [1][4]

விருதுகள் மற்றும் அங்கீகாரம்

[தொகு]

ஒரு வரலாற்றாசிரியராக நற்பெயர்

[தொகு]

மே 2007 இல், பாகிஸ்தானின் கராச்சியில் முபாரக் அலியின் மூன்று புத்தகங்களை வெளியிடும் நிகழ்வில், கராச்சி பல்கலைக்கழகத்தின் பாகிஸ்தான் ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜாஃபர் அகமது, முபாரக் அலி பற்றி பின்வருமாரு கூறியதாகக் கூறப்படுகிறது, இவர் வரலாற்றின் கவனத்தை மன்னர்களிடமிருந்து திசை திருப்பி மக்கள், கலாச்சாரம், மரபுகள், வேலைகள், பழக்கவழக்கங்கள், கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மற்றும் வரலாற்றின் நோக்கம் எவ்வளவு பரந்த அளவில் இருக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தியவர் என இவரைப் பாராட்டினார். இந்த நிகழ்வை பாகிஸ்தான் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ் ஏற்பாடு செய்தது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "History is different from farce: Dr Mubarak Ali (Profile of Mubarak Ali)". Pak Tea House website. 30 August 2008. Archived from the original on 11 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Murtaza Razvi (10 July 2001). "Review: History of a historian". oocities.org website. பார்க்கப்பட்ட நாள் 7 August 2019.
  3. Mubarak Ali listed as the editor of the quarterly journal Taarikh (History) in 2005 on Dawn (newspaper) Published 25 June 2005, Retrieved 7 August 2019
  4. History is different from farce: Dr Mubarak Dawn (newspaper), Published 9 July 2008, Retrieved 7 August 2019
  5. Mubarak Ali's profile and award info listed on oocities.org website Retrieved 7 August 2019
  6. Renowned historian Dr Mubarak Ali awarded Dawn (newspaper), Published 29 June 2018, Retrieved 7 August 2019
  7. Unbiased record of history must for enlightenment: Dr Mubarak Ali’s books launched Dawn (newspaper), Published 29 May 2007, Retrieved 7 August 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=முபாரக்_அலி&oldid=3845122" இலிருந்து மீள்விக்கப்பட்டது