முந்நைத்திரசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முந்நைத்திரசன்
பெயர்கள்
வேறு பெயர்கள்
அசைடு இயங்குருபு
இனங்காட்டிகள்
12596-60-0
ChEBI CHEBI:29448
ChemSpider 5256999
Gmelin Reference
770
InChI
  • InChI=1S/N3/c1-3-2
    Key: DUAJIKVIRGATIW-UHFFFAOYSA-N
  • InChI=1S/N3/c1-2-3-1
    Key: RLXSTAGCZQYHDL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 6857664
71328875
SMILES
  • [N-]=[N+]=[N]
  • N1=N[N]1
பண்புகள்
N3
வாய்ப்பாட்டு எடை 42.02 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

முந்நைத்திரசன் (Trinitrogen) மூன்று நைத்திரசன் அணுக்களால் ஆக்கப்பட்ட நிலைப்புத்தன்மையற்ற ஒரு மூலக்கூறாகும். இதை அசைடு இயங்குருபு என்றும் கூறலாம். முந்நைத்திரசனின் மூலக்கூறு இரண்டு வகைகளாக அமையும் சாத்தியங்கள் உள்ளன. இரட்டைப் பிணைப்பும் மின்சுமை மாற்ற கூட்டு மூலக்கூறும் கொண்ட நேர்கோட்டு வடிவம், வளைய வடிவம் என்பன அவ்விரண்டு சாத்தியங்களாகும். இவ்விரண்டு வடிவங்களுமே நிலைப்புத்தன்மையற்றவை. ஓர் ஈந்தணைவியாக இம்மூலக்கூறு செயல்பட்டால் மட்டும் அதிக நிலைப்புத் தன்மை கொண்ட வழிப்பெறுதிகள் தோன்றுகின்றன. சோடியம் அசைடும் அமோனியம் சீரியம் நைட்ரேட்டும் வினைபுரியும் அசிட்டோ நைட்ரோயேற்ற வினையில் முந்நைத்திரசன் பங்கேற்கிறது. [1][2]

ஐதரசன் அசைடை [3] ஒளியாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தி 1956 ஆம் ஆண்டு முந்நைத்திரசனின் நேர்கோட்டு அமைப்பை பி.ஏ.திருசு கண்டுபிடித்தார். [4] ஒரு நேர்கோட்டு மற்றும் சமச்சீர் மூலக்கூறாக முந்நைத்திரசன், நைத்திரசன்- நைத்திரசன் சராசரி பிணைப்பு இடைவெளி 1.8115 Å என்ற அளவும் D∞h என்ற சீர்மையும் கொண்டுள்ளது. கீழ்மற்ற ஆற்றலைக்காட்டிலும் முதலாவது உயராற்றல் நிலை A2Σu, இல் 4.56 எலக்ட்ரான் வோல்ட்டு என்றும் அறியப்படுகிறது. [5]

முந்நைத்திரசின் வளைய மூலக்கூறு அமைப்பை 2003 ஆம் ஆண்டு என்.ஆன்சேனும் ஏ.எம்.வோத்கியும் கண்டுபிடித்தனர். இதற்காக இவர்கள் குளோரின் அசைடை புற ஊதாக்கதிர் ஒளியாற்பகுப்புக்கு உட்படுத்தினர். இருப்பினும் பெரும்பாண்மையாக நேர்கோட்டு வடிவ முந்நைத்திரசனும் 20 சதவீத அளவு வளைய முந்நைத்திரசனும் உருவாகின. [4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Schlegel, H. Bernhard; Skancke, Anne (August 1993). "Thermochemistry, energy comparisons, and conformational analysis of hydrazine, triazane, and triaminoammonia". Journal of the American Chemical Society 115 (16): 7465–7471. doi:10.1021/ja00069a053. 
  2. Kuchitsu, K, தொகுப்பாசிரியர் (1998). Inorganic Molecules. Landolt-Börnstein - Group II Molecules and Radicals. 25A. doi:10.1007/b59072. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-540-61713-2. 
  3. Thrush, B. A. (10 April 1956). "The Detection of Free Radicals in the High Intensity Photolysis of Hydrogen Azide". Proceedings of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 235 (1200): 143–147. doi:10.1098/rspa.1956.0071. Bibcode: 1956RSPSA.235..143T. 
  4. 4.0 4.1 Jin, Lin; Yu, Xue-fang; Pang, Jing-lin; Zhang, Shao-wen; Ding, Yi-hong (30 July 2009). "Theoretical Study on the Reactions of the Cyclic Trinitrogen Radical toward Oxygen and Water". The Journal of Physical Chemistry A 113 (30): 8500–8505. doi:10.1021/jp810741v. பப்மெட்:19719307. Bibcode: 2009JPCA..113.8500J. 
  5. 5.0 5.1 Hansen, N.; Wodtke, A. M. (December 2003). "Velocity Map Ion Imaging of Chlorine Azide Photolysis: Evidence for Photolytic Production of Cyclic-N3". The Journal of Physical Chemistry A 107 (49): 10608–10614. doi:10.1021/jp0303319. Bibcode: 2003JPCA..10710608H. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முந்நைத்திரசன்&oldid=3788713" இலிருந்து மீள்விக்கப்பட்டது