உள்ளடக்கத்துக்குச் செல்

முதலாம் ஜஸ்டினியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதலாம் ஜஸ்டினியன்
பைசாந்தியப் பேரரசின் பேரரசர்
ஆட்சி1 ஆகஸ்ட் 527 – 14 நவம்பர் 565
முடிசூட்டு விழா1 ஆகஸ்ட் 527
முன்னிருந்தவர்முதலாம் ஜஸ்டின்
பின்வந்தவர்இரண்டாம் ஜஸ்டின்
முழுப்பெயர்
பிளேவியஸ் பெட்ரஸ் சபாதியஸ் ஜஸ்டினியனஸ் ஆகஸ்தஸ்
Flavius Petrus Sabbatius Justinianus Augustus
அரச குலம்ஜஸ்டினிய வம்சம்
தந்தைசபாதியஸ்
தாய்விகிலான்ட்டியா
பிறப்புc. 482
தவுரீசியம், தர்தானியா (இன்றைய மாக்கடோனியக் குடியரசு)
இறப்பு14 நவம்பர் 565 (அகவை 82/83)
கொன்ஸ்டான்ட்டினோப்பில்
சமயம்கிழக்கு மரபுவழி திருச்சபை

முதலாம் ஜஸ்டினியன் (இலத்தீன்: Flavius Petrus Sabbatius Justinianus Augustus, கிரேக்கம்: Φλάβιος Πέτρος Σαββάτιος Ἰουστινιανός Flábios Pétros Sabbátios Ioustinianos, பி. 482, இ. நவம்பர் 14, 565) 527 முதல் 565 வரை பைசாந்தியப் பேரரசின் பேரரசராக இருந்தார். இலத்தீன் தாய்மொழியாக வைத்துக்கொண்டிருந்த கடைசி ரோமப் பேரரசர் இவர். ஜஸ்டினியன் ஆட்சி காலத்தில், முன்னாள் ரோமப் பேரரசின் மேற்கு பகுதிகளை மறுபடி கைப்பற்ற முயற்சி செய்து, வடக்கு ஆப்பிரிக்கா, இத்தாலி, ஐபீரிய மூவலந்தீவு, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளார்.[1][2][3]

ஜஸ்டினியன் ஆட்சிக்காலத்தில் பைசாந்தியப் பேரரசின் சட்டம், கட்டிடக்கலை, பொருளாதாரம் முன்னேறி வந்தது. ஹேகியா சோபியா உள்ளிட்ட பல புகழ்பெற்ற கட்டிடங்களின் உருவாக்கத்தை மேற்பார்வையிட்டார். ஜஸ்டினியனால் வெளியிடப்பட்ட கோர்ப்பஸ் ஜூரிஸ் சிவிலிஸ் என்கிற சட்ட நூல், பல நாடுகளில் இன்று வரை பயனில் உள்ள குடிமையியல் சட்ட முறையின் அடிப்படையாக அங்கீகரிக்கப்படுகிறது.

கிழக்கு மரபுவழி திருச்சபையில் ஜஸ்டினியன் புனிதராக வணங்கப்படுகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. J. B. Bury (2008) [1889] History of the Later Roman Empire from Arcadius to Irene II. Cosimo, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1605204056, p. 7.
  2. Cameron, Alan (1988). "Flavius: a Nicety of Protocol". Latomus 47 (1): 26–33. https://www.jstor.org/stable/41540754. பார்த்த நாள்: 9 August 2023. 
  3. Abdy, John Thomas (1876). The Institutes of Justinian. Cambridge University Press. p. 21. Archived from the original on 4 November 2023. பார்க்கப்பட்ட நாள் 10 October 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_ஜஸ்டினியன்&oldid=4101957" இலிருந்து மீள்விக்கப்பட்டது