முக்கோலக்கல் பகவதி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முக்கோலக்கல் பகவதி கோயில் ,இந்தியாவில், கேரளாவில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில்களில் ஒன்றான இந்து தாய் தெய்வமான பகவதிக்கான புகழ்பெற்ற கோயிலாகும்.கேரளாவில் உள்ள புகழ்பெற்ற தாய்த்தெய்வக் கோயில்களான இக்கோயில் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாப சுவாமி கோவிலுக்கு தென்கிழக்கே ஸ்ரீ வராஹம் என்னுமிடத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவராஹம் லட்சுமி வராஹ கோயிலுக்கு தெற்கே இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலின் வருடாந்திர சமய திருவிழாவான 'ஊருட்டு மஹோத்ஸவம்' ஒவ்வொரு ஆண்டும் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகிறது.

புராணம்[தொகு]

ஒரு சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தை வண்டல் பாறையில் மோதி கீழே விழுந்ததாகவும், சிறிது நேரத்தில் அந்தப் பாறையில் இருந்து ரத்தம் வர ஆரம்பித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. கல்லில் தெய்வீகம் இருப்பதை உணர்ந்த மக்கள் பாறையை வணங்கத் தொடங்கினர், இது இறுதியில் தெற்கு கேரளாவில் உள்ள ஒரு பிரபலமான கோவிலாக மாறியது. [1]

துணைத்தெய்வங்கள்[தொகு]

இங்குள்ள மூலவர் பஞ்சலோக சிலை சுயம்புவாக உருவானதாகக் கூறப்படுகிறது. இங்கு கணேஷ், நாகராஜா, பிரம்மராக்ஷஸ்ஸு, மாடன் தம்புரான், யக்ஷி அம்மா. நவக்கிரகம் போன்ற பிற துணைத்தெய்வங்கள் உள்ளன.

முக்கியமான விழாக்கள்[தொகு]

நவராத்திரி அகோஷம், விருச்சிக மண்டல மஹோத்ஸவம். கோவிலின் ஆண்டு திருவிழா, விஷு பண்டிகை, ஆடி சொவ்வா திருவிழா போன்றவை இங்கு நடைபெறுகின்ற முக்கியமான திருவிழாக்கள்ஆகும்.

கோயில் அமைவிடம்[தொகு]

இக்கோயில், திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் KSRTC மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரம் நகர பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mukkolakkal Bhagawathi Temple". பார்க்கப்பட்ட நாள் 1 June 2015.