முகுல் சிவபுத்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகுல் சிவபுத்ரன்
இயற்பெயர்முகுல் சிவபுத்ரன் கோம்காலிமத்
பிறப்பு25 மார்ச்சு 1956 (1956-03-25) (அகவை 68)
பிறப்பிடம்தேவாஸ், இந்தோர், மத்தியப் பிரதேசம், இந்தியா
இசை வடிவங்கள்கயல், பஜனைகள், தும்ரிஸ்
தொழில்(கள்)இந்துஸ்தானி இசை
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்1975–தற்போது வரை
இணையதளம்https://www.gandharvasabha.com/

பண்டிட் முகுல் சிவபுத்ரன் (Mukul Shivputra) (பிறப்பு 25 மார்ச் 1956) (முன்பு முகுல் கோம்காலிமத் என்று அழைக்கப்பட்டவர்) குவாலியர் கரானாவின் (இசைப்பள்ளி) இந்துஸ்தானி இசைப் பாடகராவார். இவர் பண்டிட் குமார் கந்தர்வனின் மகனும் முதன்மை சீடரும் ஆவார்.[1]

ஆரம்ப வாழ்க்கையும் பயிற்சியும்[தொகு]

பானுமதி கவுன்ஸ் மற்றும் குமார் கந்தர்வன் ஆகியோருக்கு போபாலில் பிறந்த முகுல், தனது தந்தையிடமிருந்து ஆரம்பத்தில் இசைப் பயிற்சி பெற்றார். கி. கு. கிண்டேவிடம் துருபத் மற்றும் தாமரிலும், எம். டி. இராமநாதனிடம் கருநாடக இசையிலும் தனது இசைக் கல்வியைத் தொடர்ந்தார். [2]

தொழில்[தொகு]

குரல் பயிற்சி பெறுவதற்காக தனது பதின்ம வயதிலிருந்தே, தம்புராவுடன் தனது தந்தையுடன் தொடர்ந்து சென்றார். "முகுல் கோம்காலிமத்" என்று அழைக்கப்பட்ட சிவபுத்ரன் 1975 இல், 23வது சவாய் கந்தர்வ இசை விழாவில் இவரது முதல் நிகழ்ச்சியை அறிமுகம் செய்தார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

புவனேஷ் கோம்காலி (இவரும் ஒரு பாடகர்) என்ற தனது மகன் பிறந்தபோது முகுல் தனது மனைவியை இழந்தார். தற்போது புனேவில் வசிக்கிறார்.

இவர் இளம் திறமையாளர்களை அடையாளம் காண பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறார். மேலும், தனது சொந்த இசைப் பள்ளியை அமைக்கவும் திட்டமிட்டுள்ளார் [3]

நிகழ்ச்சிகள் பற்றிய கட்டுரைகள்[தொகு]

  • பாரத நாட்டிய மந்திர், புனே 20 ஜூலை 2012 [4]
  • விருத்தா ஆனந்த் ஆசிரமம், புனே, அகுர்டி, 17 ஆகஸ்ட் 2012 [5]
  • புனே, 10 மார்ச் 2013 [6]

சான்றுகள்[தொகு]

  1. Saumit Singh (2 April 2014). "The forgotten Gandharva putra". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 2015-10-12.
  2. "Mukul Shivputra". indiansarts.com.
  3. Jayadev Calamur (27 March 2016). "Music is my soul, my universe - Pandit Mukul Shivputra". DNA news. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
  4. "Pt. Mukul Shivputra and Laughing Kumar Gandharva". mandar karanjkar.
  5. "Pt. Mukul Shivputra : Maestro on the peak". mandar karanjkar.
  6. "Pt. Mukul Shivputra- The grace continues". mandar karanjkar.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகுல்_சிவபுத்ரன்&oldid=3445455" இலிருந்து மீள்விக்கப்பட்டது