முகவாதம்
முகவாதம் | |
---|---|
முகவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரின் முகம் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | நரம்பியல் |
ஐ.சி.டி.-10 | G51.0 |
ஐ.சி.டி.-9 | 351.0 |
நோய்களின் தரவுத்தளம் | 1303 |
மெரிசின்பிளசு | 000773 |
ஈமெடிசின் | emerg/56 |
பேசியண்ட் ஐ.இ | முகவாதம் |
ம.பா.த | D020330 |
முகவாதம் (Bell's palsy) என்பது முகத்தின் ஏதேனும் ஒரு பக்கத்தில் உள்ள தசைகள் மொத்தமும் திடீரென்று பலவீனமடைந்து செயலிழப்பது ஆகும். இது பெரும்பாலும் குளிர் காலத்தில் மனிதர்களை தாக்கும் ஒரு நோயாகும். பெரும்பாலும் இது வைரஸ் கிருமிகளின் பாதிப்பினால் வருகிறது. வைரசுகள் முக நரம்பைப் பாதிக்கும்போது, அந்த நரம்பில் அழற்சி ஏற்பட்டு வீங்கிக்கொள்கிறது. அப்போது நரம்பின் செயல்பாடு தற்காலிகமாக நின்றுவிடும் சூழலில் முக வாதம் வருகிறது.[1] முகவாதத்தால் முகத்தில் ஒரு பக்கம் செயல்படாமல் போகும். உதடுகள் கோணி, சிரிக்க முடியாது. கண்ணை மூடுவதற்குச் சிரமம் ஏற்படும். கண்ணில் நீர் வடியும் அல்லது கண் உலர்ந்துவிடும். வாயின் ஓர் ஓரத்தில் எச்சில் வடியும். சிலருக்குத் தலைவலிக்கும். இன்னும் சிலருக்குத் தாடை வலிக்கும். காதுக்குப் பின்புறம்கூட வலி ஏற்படலாம், உமிழ் நீர் முழுங்க முடியாமல் போகும்.[2]
தடுக்கும்விதம்
[தொகு]இதில் இருந்து தப்பிக்க குளிர்காலத்திலும், குளிர் காற்று வீசும் பொழுதும் குளிர்தடுப்பு ஆடைகள் அணிந்துகொண்டும், காதில் பஞ்சை வைத்துக்கொள்வது. கை, கால் ஆகியவற்றிற்கு உறைகளைப் பயன்படுத்துவது போன்றவற்றால் இந்த பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
சிகிச்சை
[தொகு]முகவாதம் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இயன்முறை சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதியானால், மாத்திரையைக் கொடுப்பது உண்டு. வலி போக்கிகள் தற்காலிக நிவாரணத்துக்குத் தரப்படும். எவ்வாறாயினும் இதன் பாதிப்பில் இருந்த விடுபட பதினைந்து நாள்முதல் ஒருமாதம்வரை ஆகும்.[3]
மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகள்
[தொகு]- கண்களை இறுக்க மூடி திறப்பது,
- பலூனை வாயில் ஊதுவது,
- ஆங்கில உயிர் எழுத்துகளான ஏ, இ, ஐ, ஓ, யூ ஆகியவற்றை சரியான உச்சரிப்பில் சத்தமாக வாய்விட்டுக் கூறுவது
- முக பாவனைகளான முக அசைவுகளை கண்ணாடி முன் நின்று செய்வது
ஆகியவையே இதற்கான பயிற்சிகள்.
மேற்கோள்
[தொகு]- ↑ டாக்டர் கு. கணேசன் (2018 சூலை). "முக வாதம் முகம் காட்டினால்?". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 8 சூலை 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ http://keetru.com/index.php?option=com_content&view=article&id=15886:2011-07-30-06-37-27&catid=932:2009-10-24-02-55-47&Itemid=180
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-04-15.
4.பாஸ்டன் மருத்துவ இதழ் [1]