முகம்மது அன்வர்த்தின் கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முகம்மது அன்வர்த்தின் கான் 1672 ஆம் ஆண்டில், ஆவாத்தில் உள்ள ஹாரோயி மாவட்டத்தில் கோபாமாவில் பிறந்தார். இவர் ஹாஜி முகமது அன்வர் உத்-தின் கானின் மகன் ஆவார். இரண்டாம் கர்நாடகப் போரில் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இவரைப் படடைக் காயாகப் பயன்படுத்திக் கொண்டனர் . இரண்டாம் கர்நாடகப் போரின் முடிவில் இவரது மகன் முகமது அலிக்கே முடி சூட்டப்பட்டது. நாவாப் ஆவதற்கு முன்  தில்லிக்கு சென்று, ஏகாதிபத்திய இராணுவத்தில் சேர்ந்தார். விரைவில் உயர் நிலைக்கு உயர்ந்தார். ஹைதராபாத்தின் முதல் நிஜாம் ஆவார்.

பிறப்பு[தொகு]

இவர் எல்லூர், இராஜமுந்திரி ஆளுநராகவும் இருந்தார். ஹைதராபாத், கோரா மற்றும் ஜஹானாபாத் ஆகிய பகுதிகளின் ஆட்சியாளராகவும் இருந்தார். இவரை அன்வர் உத்-தின் கான் பகதூர் என்று  பேரரசர் அவுரங்கசீப் ஆலம்கீர் அவர்கள் அழைத்தார். மார்ச் 28, 1744 அன்று  கர்நாடகத்தின்  ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார். 1746 இல், பிரஞ்சு மற்றும் ஆங்கிலம் முதல் கர்நாடக போரில் இந்தியாவில் ஒருவருக்கொருவர் மீது மேலாதிக்கத்தை செலுத்தியது.  கர்நாடகப் போரில்

கர்நாடக நவாப்[தொகு]

1746 இல் பிரஞ்சு அரசு ஆங்கிலேயரின் வசம் இருந்த  சென்னை மாகாணத்தை கைப்பற்றியது. பிரெஞ்சு அரசின் ஆட்சியே கோலோச்சியது.  ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளக் கூடாது என எச்சரித்தார். ஆனால் பிரஞ்சு அரசின் டியூப்ளே அவரது எச்சரிக்கையை அலச்சியம் செய்தார். அன்வருதீனுக்காகவே  சென்னையை ஆங்கிலேயரிடம் இருந்து கைப்பற்றப் போவதாக டூப்ளே முதலில் தெரிவித்தார். ஆனால் அவர் சென்னையை அன்வருதீனிடம் அளிக்கவில்லை. இதுவும் ஒரு வகையில் முதலாம் கர்நாடகப் போருக்குக் காரணமானது.[1]

போர்[தொகு]

அவர் தனது மகன் மஹ்பூஸ் கான் கீழ் 10,000 ஆண்கள் ஒரு இராணுவத்தை அனுப்பினார். அடையார் ஆற்றின் கரையில் அடையார்  போரில் 300-ஆவது பிரெஞ்சு படைக்கு எதிராக அவர்கள் போராடினர்.  தீர்க்கமான பிரெஞ்சு வெற்றி மோசமாக பயிற்சி பெற்ற இந்தியத் துருப்புக்களை எதிர்ப்பதில் நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பிய சக்திகளின் செயல்திறனை நிரூபித்தது.[2]

அன்வருதீன் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். எனவே பிரெஞ்சு அரசு கர்நாடகப் பகுதியில் அன்வருதீனின் செல்வாக்கைக் குறைக்க விரும்பியது. எனவே சந்தா சாகிப்பை கர்நாடக அரசின் நவாபாக அறிவித்தது.

பிரித்தானிய மற்றும் பிரஞ்சு நவாபிக்கும் தங்கள் அந்தந்த வேட்பாளர்களை ஆதரித்தது என்றாலும், அவர்கள் ஹைதராபாத் நிஜாம் ஆட்சியில் தொடர்ந்து மோதல் பக்கங்களிலும் எடுத்து. 1748 இல் நிஜாம் உல்-முல்க் இறந்த பிறகு, அவரது இரண்டாவது மகனான நாசீர் ஜங் மற்றும் அவரது பேரனான முசப்தர் ஜங் இடையே போட்டி ஏற்பட்டது. முசாஃபர் ஜங் தெற்கில் ஒரு வலுவான சக்தியாக வந்தார், மேலும் சாந்தா சாஹிப் மற்றும் பிரஞ்சுடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

போரில் தனது ஆதிக்கத்தை  பிரெஞ்சு ஆளுநர் டூப்ளே செலுத்தினார். 1746–1748 காலகட்டத்தில் நடைபெற்றது. ஆற்காடு நவாப், ஐதராபாத் நிசாம் போன்ற இந்திய ஆட்சியாளர்களிடையே ஏற்பட்ட மோதல்களில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் தலையிட்டு வந்தன. முகலாயப் பேரரசு வலுவிழந்த பின்னர் கர்நாடகப் பகுதி டெல்லி ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி சுதந்திரமாகச் செயல்படத் தொடங்கியது. பெயரளவில் ஐதராபாத் நிஜாம்  இப்பகுதியை ஆண்டு வந்தார். ஆனால் உண்மையில் நவாப் தோஸ்த் அலியின் கட்டுப்பாட்டில் கர்நாடகப் பகுதிகள் இருந்தன. அவரது மரணத்துக்குப்பின் யார் இப்பகுதியை ஆள்வது என்பது குறித்த பலப்பரீட்சை உருவானது. நிசாமின் மருமகன் சந்தா சாகிப் ஆற்காடு நவாப் அன்வாருதீன் முகமது கானும் கருநாடக நவாப் ஆக முயன்றனர். இருவருக்குமிடையே மூண்ட போரில் சந்தா சாகிப்புக்கு ஆதரவாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பனியும், ஆற்காடு நவாப்புக்கு ஆதரவாக பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியும் களமிறங்கின. 1748 இல் ஐரோப்பாவில் மூண்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போரின் பகுதியாக தென்னிந்தியாவிலும் இரு ஐரோப்பிய நிறுவனங்களும் மோதின. ஆளுனர் டூப்ளேயின் பிரெஞ்சுப் படைகள் 1746 இல் சென்னையை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்றின. அடுத்து நடைபெற்ற அடையார் சண்டையில் ஆற்காடு நவாபின் படைகளைத் தோற்கடித்தன. 1748இல் ஐக்ஸ் லா ஷப்பேல் ஒப்பந்த்தின் மூலம் ஐரோப்பாவில் போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, தென்னிந்தியாவிலும் அமைதி திரும்பியது.இரண்டாம் கர்நாடகப் போர் 1749-54 காலகட்டத்தில் நடைபெற்றது. இரு வாரிசுரிமைச் சச்சரவுகள் இதற்குக் காரணமாக அமைந்தன. 1748 இல் ஐதராபாத் நிசாம் நிசாம்-உல்-முல்க் இறந்தார். அவரது மகன் நசீர் ஜங்கும் பேரன் முசாஃபர் ஜங்கும் அடுத்த நிசாமாகப் போட்டியிட்டனர். அதே வேளை சந்தா சாகிப் ஆற்காடு நவாபாக முயன்றார். முசாஃபர் ஜங்கும் சந்தா சாகிப்பும் பிரெஞ்சு ஆதரவைப் பெற்றிருந்தனர். நசீர் ஜங்கும் ஆற்காடு நவாப் அன்வாருதீனும் பிரித்தானிய ஆதரவைப் பெற்றிருந்தனர். போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு தரப்புக்குத் தொடர் வெற்றிகள் கிட்டின. அன்வாருதீன் 1749 இல் கொல்லப்பட்டார். சந்தா சாகிபும் முசாஃபர் ஜங்கும் முறையே கர்நாடக நவாபாகவும் ஆற்காடு நவாபாகவும் பதவியேற்றனர். ஆனால் 1751 இல் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரித்தானியப் படைகள் ஆற்காட்டைக் கைப்பற்றின. 1754 இல் கையெழுத்தான பாண்டிச்சேரி ஒப்பந்தத்தின் மூலம் அமைதி திரும்பியது. முகமது அலி கான் வாலாஜா ஆற்காடு நவாபானார். இப்போரின் பலனாக பிரெஞ்சு தரப்பு பலவீனமடைந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் நிலை பலப்பட்டது.

[2]

ஆங்கிலேயரால் ஆதரிக்கப்பட்ட நவாப் முகமது  அன்வருதின், ஆகஸ்ட் 3, 1749 அன்று பிரெஞ்சு இராணுவத்தை ஆம்பூர் நகரில் தனது படையுடன் சந்தித்தார். இது ஆம்பூர் போர் எனப்படுகிறது. அப்போரில் அன்வர்திகான் அவரது 77வது வயதில் கொல்லப்பட்டார்.  " நவாப் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இறந்துவிட்டார் என்று ரிப்ளி குறிப்பிட்டார்.

மேற்கோள்[2][தொகு]

  1. Rinkerman, Gary (2012), "Looking Beyond the Google Books Settlement", Information Technology and Law Series, T. M. C. Asser Press: 239–258, ISBN 9789067048453
  2. 2.0 2.1 2.2 S., Naravane, M. (2006), Battles of the honourable East India Company : making of the Raj, A.P.H. Pub. Corp, ISBN 813130034X, OCLC 74990206{{citation}}: CS1 maint: multiple names: authors list (link)