மீரா விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா விஜயன், இடதுபுறம், செனெட் சைம்ருவில் - வெல்சு பாராளுமன்றம் ; நவம்பர் 2014

மீரா விஜயன் (Meera Vijayann) பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் சமூக தொழில்முனைவு பற்றிய செய்தியாளர் ஆவார். இவர் ஆர்லிங்டன், வர்ஜீனியாவில் உள்ள அசோகாவில் தகவல் தொடர்பு மேலாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மோதல் சமயங்களில் சமூக வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் இளைஞர் தூதராக உள்ளார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

பாலியல் வன்கொடுமை பிரச்சனைகள் குறித்து இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும், கல்வி கற்பிக்கவும் நவீன ஊடகங்களை ஆக்கப்பூர்வமான வழிகளில் மீரா பயன்படுத்தினார். ஃபோர்ப்ஸ், தி கார்டியன், தி டெக்கான் ஹெரால்ட், தி ஹஃபிங்டன் போஸ்ட், சிஎன்என், ஐபிஎன் லைவ், ஓபன் டெமாக்ரசி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரசு உள்ளிட்ட ஊடகங்களில் இவரது கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவு இடுகைகள் வெளிவந்துள்ளன. அமில வீச்சுக்கு ஆளானவர்கள் மீதான சமூகத்தின் அணுகுமுறை பற்றி இவர்"ஐ டோன்ட் வாண்ட் டு பி ஜஸ்ட் எ சர்வைவர்: மூவிங் ஆன் ஃப்ரம் ஆன் ஆசிட் அட்டாக்" எனும் நூலினை எழுதியுள்ளார். "

அங்கீகாரம்[தொகு]

2013 ஆம் ஆண்டில், தில்லி கூட்டுப் பலாத்காரத்தைத் தொடர்ந்து நடந்த போராட்டத்தைப் புகாரளித்ததற்காக சிஎன்என்-ஐபிஎன் சிட்டிசன் ஜர்னலிசம் எனும் விருதை வென்றார். [1] இலண்டனில் உள்ள TEDx ஹவுஸ் ஆஃப் பார்லிமென்ட் மற்றும் வேல்ஸ் நேஷனல் அசெம்பிளி [2] ஆகியவற்றில் 'பாலியல் வன்முறைக்கு எதிரான குரலைக் கண்டறிதல்' என்ற தலைப்பில் ஒரு உரையை வழங்கினார். இவர் இந்தியாவுக்கான இளைஞர் தூதுவர் ஆவார் .

2021 இல், மீடியம் ரைட்டர்சு சேலஞ்சு எனும் போட்டியின் நான்கு வெற்றியாளர்களில் ஒருவராக ($10 000 பரிசு) இருந்தார். [3]

மேலும் பார்க்கவும்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Sarah Brown. "'She could have been me': Action urged after Delhi gang rape case". பார்க்கப்பட்ட நாள் 23 March 2019.
  2. Vijayann. "Find your voice against gender violence". பார்க்கப்பட்ட நாள் 23 March 2019.
  3. Kristina God (14 October 2021). "Introducing the Winners of the Medium Writers Challenge". Medium. பார்க்கப்பட்ட நாள் 14 October 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீரா_விஜயன்&oldid=3823703" இலிருந்து மீள்விக்கப்பட்டது