வித்யுத் கோரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வித்யூத் கோரே  (Vidyut Gore பிறப்பு 6 டிசம்பர் 1976), முன்பு வித்யுத் காலே என்றும் சில சமயங்களில் வித்யுத் என்றும் அறியப்படும் இவர் இந்திய பகுதி நேர பதிவர், ஊடக பத்திரிகையாளர், பிரச்சாரகர் மற்றும் ஆர்வலர் ஆவார். இவர் இந்திய குடும்பங்களில் ஏற்படும் குடும்ப வன்முறைகளை வெளிப்படுத்தும் செயலுக்காக பரவலாக அறியப்பட்டார்,[1] இந்தியாவில் அரசியல் மற்றும் பொது ஊழலை வெளிப்படுத்தும் இவரது பணி இந்திய ஊடகங்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் இரண்டிலும் விவரிக்கப்பட்டுள்ளது.[2][3][4] Her challenges to Indian digital censorship,[5] சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்து இந்திய ஊடகங்கள் பரவலாக இவரிடம் கருத்துக் கேட்கிறது.[6][7][8] ஆகஸ்ட் 2019 இல், இவர் ஆல்ட் சர்க்கார் ஸ்பூஃப் மாற்று அரசாங்க குறித்த பணி திட்டத்தை தொடங்கினார், இது பல்வேறு ஊடக கவனத்தைப் பெற்றது.[9][10][11]

வலைப்பதிவுகள் மற்றும் வலைத்தளங்கள்[தொகு]

கோரே 2009 ஆம் ஆண்டு முதல் இந்திய சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து வலைப்பதிவில் எழுதி வருகிறார்,[1][12] 2010 இல் இவர் இந்தியாவின் "விக்கிலீக்ஸ்" என்று விவரிக்கப்பட்டார். அக்டோபர் 2011 இல், மும்பையில் நடந்த கீனன் சாண்டோஸ் மற்றும் ரூபன் பெர்னாண்டஸ் ஆகியோரின் கொலைகள் பற்றிய இவரது பதிவுகள் காரணமாக இவர் இந்தியாவில் பரவலாக முக்கியத்துவம் பெற்றார், இது ஊடகங்கள் மற்றும் இந்திய காவல்துறையினர் புறக்கணித்ததாகக் கருதப்பட்ட ஆதாரங்களை இவர் அம்பலப்படுத்தினார். 2013 ஆம் ஆண்டில், இந்தியா டுடே கோரைப் பற்றி பின்வருமாறு எழுதியது: "தைரியமான வலைப்பதிவாளர் மும்பையில் நடந்த கீனன் மற்றும் ரூபன் கொலைகள் பற்றிய தனது வலைப்பதிவுகளில் செய்தி வெளியிட்டார். இவரது முயற்சியே ஏழை குடும்பங்களுக்கு தேவையான கவனத்தைப் பெற உதவியது மற்றும் கொலையாளிகள் தண்டனையில் இருந்து தப்பிச் செல்வதைத் தடுக்க உதவியது."

2013 ஆம் ஆண்டில், கபில் சிபல், அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி ஏமாற்று வலைத்தளங்களை உருவாக்கியபோது இவர் மேலும் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றார்.இந்தியா டுடே, கோரை "கிண்டல் தளங்களுக்குப் பின்னால் உள்ள மூளை" என்று விவரித்து, "தவறான விஷயங்களைச் சொல்லும் அல்லது இவர்களின் வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்லும் அரசியல்வாதிகள் மீதான கோபத்தின் நேரடி விளைவாக இவரது மிகைப்படுத்து முறை உள்ளது" என்று கூறினார்.

வீட்டு வன்முறை[தொகு]

கோரே தனது வலைத்தளத்தைப் பயன்படுத்தி இந்தியாவில் ஓரினச்சேர்க்கை போன்ற பிரச்சனைகள் மற்றும் இந்திய குடும்பங்கள் மற்றும் சமுதாயத்தில் வழக்குகள் பதியப்படாத குடும்ப வன்முறையின் அளவு பற்றி விவாதித்தார். அதற்காக கோரே சர்வதேச ஊடக கவனத்தைப் பெற்றார். இவர் தனது சொந்த திருமணத்தில் குடும்ப வன்முறைகளை எதிர்கொண்டுள்ளார். இவர் அதனைப் பற்றியும் தனது வலைத்தளத்தில் எழுதியுள்ளார். மார்ச் 2012 இல், நியூயார்க் டைம்ஸ் கோரை மேற்கோள் காட்டி, "பாலியல் துன்புறுத்தல் செய்பவர் ஒருபோதும் தங்கள் செயல்களின் மூலம் பரவலான சமூக கவன்த்தினைப் பெருவதனை விரும்பவில்லை, ஆனால் இந்த விடயத்தில் பெண்களின் அமைதியை உடைப்பதே விடுதலையாகும். வேளிப்படையாக பேசும் போது தான் நான் அவமானப்படுவதனை நிறுத்துகிறேன்" என்று எழுதியது.இவர் நியூயார்க் டைம்சிடம்: "பெரும்பாலான இந்திய பெண்கள் சமமற்ற சூழலில் உள்ளனர்" என்று கூறினார். ஜனவரி 2015 இல், ஆசியாவின் மிக உயர்ந்த மதிப்பீடு பெற்ற சிந்தனைக் குழுக்களில் ஒன்றான அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் கோரே எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது: "பெண்கள் துன்புறுத்தல் பற்றி பேசும்போது, பேசுபவர்கள் பெரும்பாலும் மிகையுணர்ச்சிக் கோளாறு வாய்ந்தவர்களாகவே முத்திரை குத்தப்படுகிறார்கள், காலே விஷயத்தில் இது தெளிவாகக் காணப்படுகிறது" மேலும் "இவளுடைய அழுக்கு துணியை பொதுவில் கழுவியதைப் போல இவளது தீவிர சமூக-அரசியல் கருத்துக்களுக்காக இவள் துன்புறுத்தல்களை எதிர்கொள்கிறாள்" என்று இவருக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்தது.

ஆகஸ்ட் 2019 இல் கோரே ஆல்ட் சர்கார் என்பதனை டுவிட்டரில் துவங்கினார். இது அரசாங்கத்தினை மிகைப்படுத்து முறை செய்வதனைப் போன்றதாகும். இதில் டுவிட்டரில் இவரை பிரதம அமைச்சராக இவரது ஆதரவாளர்கள் தேர்வு செய்தனர். In August 2019, Gore launched Alt Sarkar (which translates as "Government" in Hindi), a spoof alternative Indian government administration on the Twitter platform, where Gore was elected Prime Minister by Twitter followers.[9][13]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Hemchhaya De (2 May 2017). "Blogger Vidyut Kale on being politically incorrect" (in ஆங்கிலம்). femina.in. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2019.
  2. Roy, Nilanjana S. (27 March 2012). "When Home Is No Refuge for Women" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 27 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190327133110/https://www.nytimes.com/2012/03/28/world/asia/28iht-letter28.html. "Vidyut Kale is a corporate trainer and blogger who has written extensively about witnessing domestic violence in her family as a child, and then confronting abuse — emotional, financial and sexual — in her own marriage." 
  3. "Meet the brain behind the sarcasm sites on Narendra Modi and Rahul Gandhi" (in en-US). இந்தியா டுடே. 27 March 2012 இம் மூலத்தில் இருந்து 27 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190327221813/https://www.indiatoday.in/india/north/story/narendra-modi-rahul-gandhi-sarcasm-sites-spoof-websites-172144-2013-07-30. 
  4. "After Narendra Modi, Rahul Gandhi, Kapil Sibal gets a sarcastic site on himself". இந்தியா டுடே. 3 August 2013. Archived from the original on 23 March 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019. The daredevil homemaker-cum-blogger shot into news with her blogs on the Keenan and Reuben murders in Mumbai. It was her efforts that helped the poor families get the attention that their case required and helped prevent the killers from going scot-free.
  5. Sathe, Gopal (2 November 2012). "liveMint: Free Speech | Virtual empowerment" (in ஆங்கிலம்). Mint. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019. Blogger Vidyut Kale has run www.aamjanta.com for six years. Mumbai-based Kale has written about corruption in the past and when someone sends her proof about a scam or a particular case, she posts the details on her website.
  6. Kim Arora (2 May 2014). "Activists bemoan absence of "active" Pirate Party in India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 31 March 2019. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019. Mumbai-based blogger and activist Vidyut Kale became active with the Indian Pirate Party last year.
  7. Khuldune Shahid (8 January 2016). "Peace after Pathankot". The Friday Times. பார்க்கப்பட்ட நாள் 23 March 2019. Indian sociopolitical blogger Vidyut Kale believes that while critics of Modi will not spare the opportunity to question him, most of them – except Shiv Sena – are very pro-talks.
  8. DIVYA RAJAGOPAL (10 February 2015). "Team AIB apologises to Christian community". India Times. Archived from the original on 28 March 2019. பார்க்கப்பட்ட நாள் 25 March 2019. "Knowing the state of breaking law to create outrage, profiting from it, and ENDORSING them with public apology after apology. AIB FAIL," tweeted Vidyut Kale, blogger and a frequenter commentator on the micro blogging site Twitter.
  9. 9.0 9.1 Lazarus, Susanna Myrtle. "Meet India's spoof PM of an Alt Sarkar on Twitter". The Hindu இம் மூலத்தில் இருந்து 17 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190917081246/https://www.thehindu.com/news/national/meet-indias-spoof-pm/article29416638.ece. 
  10. Kapur, Manavi (29 August 2019). "A poll on Twitter has birthed an all-spoof alternative Indian government". Yahoo finance. Archived from the original on 1 September 2019. பார்க்கப்பட்ட நாள் 17 September 2019.
  11. Dhingra, Sanya (23 August 2019). "With #AltSarkar, India gets a new 'government' and 'prime minister' — on Twitter". ThePrint. Archived from the original on 1 September 2019. பார்க்கப்பட்ட நாள் 1 September 2019.
  12. "Indian woman mirrors WikiLeaks". ePathram. 7 December 2010. Archived from the original on 27 March 2019. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019. Vidyut Kale, a behavioural scientist and corporate trainer based in Mumbai says that she felt that the Indian media has made a mess of the way the WikiLeaks revelations were reported.
  13. Manavi Kapur (29 August 2019). "A poll on Twitter has birthed an all-spoof alternative Indian government". Quartz (publication). Archived from the original on 13 September 2019. பார்க்கப்பட்ட நாள் 18 October 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வித்யுத்_கோரே&oldid=3920491" இலிருந்து மீள்விக்கப்பட்டது