மிலோசு சிமான்
மிலோசு சிமான் (Miloš Zeman) | |
---|---|
![]() | |
செக் குடியரசின் 3-வது அரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 8 மார்ச்சு 2013 | |
பிரதமர் | பியோத்தர் நேக்காசு ஜிரி ருசுனோக் போகுசுலாவ் சபோத்கா அந்திரே பாபிசு |
முன்னவர் | வாசிலாவ் கிளாசு |
செக் குடியரசின் 3வது பிரதம அமைச்சர் | |
பதவியில் 22 யூலை 1998 – 15 யூலை 2002 | |
குடியரசுத் தலைவர் | வாக்லாவ் அவொல் |
முன்னவர் | யோசெப் தொசோவ்ஸ்கி |
பின்வந்தவர் | விளாதிமிர் ஸ்பித்லா |
2வது நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் 27 யூன் 1996 – 17 யூலை 1998 | |
குடியரசுத் தலைவர் | வாக்லாவ் அவொல் |
முன்னவர் | மிலான் யூதெ |
பின்வந்தவர் | வாசிலாவ் கிளாசு |
சமூக சனநாயகக் கட்சித் தலைவர் | |
பதவியில் 28 பெப்ரவரி 1993 – 7 ஏப்ரல் 2001 | |
முன்னவர் | ஜிரி ஒராக் |
பின்வந்தவர் | விளாதிமிர் ஸ்பித்லா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 செப்டம்பர் 1944 கோலின், செக் குடியரசு |
அரசியல் கட்சி | செக்கோசிலோவாக்கியா கம்யூனிஸ்டுக் கட்சி (1968–1970) மக்கள் பேரவை (1990–1991) மக்கல் இயக்கம் (1991–1992) சமூக சனநாயகக் கட்சி (1992–2007) மக்கள் உரிமைக் கட்சி (2009–இன்று) |
வாழ்க்கை துணைவர்(கள்) | பிளாங்கா செமனோவா (மணமுறிவு) இவானா பெத்னார்சிக்கோவா (1993–இன்று) |
பிள்ளைகள் | 2 |
படித்த கல்வி நிறுவனங்கள் | பொருளியல் பல்கலைக்கழகம், பிராகா |
கையொப்பம் | ![]() |
இணையம் | அதிகாரபூர்வ இணையதளம் |
மிலோசு செமான் (Miloš Zeman, செக் ஒலிப்பு: [ˈmɪloʃ ˈzɛman] (கேட்க); 28 செப்டம்பர் 1944) செக் குடியரசின் மூன்றாவது அரசுத்தலைவர் ஆவார். 2013 மார்ச்சு 3 இல் இருந்து இப்பதவியில் உள்ளார். 1998-2002 வரை செக் குடியரசின் பிரதம அமைச்சராக பதவி வகித்தார். செக் சமூக சனநாயகக் கட்சியின் தலைவரான இவர் 1990இல் அக்கட்சியை செக் குடியரசில் பெரிய கட்சிகளில் ஒன்றாக ஆக்கினார். 2013இல் முதல் முறையாக அதிபராக தேர்வானார். செக் குடியரசில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடு்க்கப்பட்ட முதல் அரசுத்தலைவர் இவர் தான். 2018 சனவரி 27இல் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் முன்னவர்கள் இருவரும் செக் நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தொடக்க கால வாழ்க்கை[தொகு]
இவர் கோலின் என்ற நகரில் பிறந்தார்[1]. அவரின் பெற்றோர் இவருக்கு இரண்டு வயதாக இருக்கும் போது விவாகரத்து பெற்றனர். இவர் ஆசிரியராக வேலை பார்த்த இவரின் தாயிடம் வளர்ந்தார்[1] . கோலினிலுள்ள உயர் நிலைப்பள்ளியில் கல்வி கற்ற இவர் 1965இல் பிராகா நகரத்திலுள்ள பொருளாதாரத்திற்கான பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1969இல் அங்கு படிப்பை முடித்தார்[1].
1968இல் பிராகா இளவேனிற் கால கட்டத்தில் பொதுவுடைமை கட்சியில் இணைந்தார். ஆனால் 1970 செக்கோசுலோவியா மீதான வார்சா உடன்பாடு நாடுகளின் தாக்குதலை எதிர்த்ததால் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் [2]. வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இவர் பின்பு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக (1971-84) இசுபோர்ட்சுபுரோபக் நகர விளையாட்டு ஆணையத்தில் பணி புரிந்தார் [3].1984இல் அகோர்டாட் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இவரின் முன்னறிவிப்பும் மீள்கட்டமைப்பும் "Prognostika a přestavba" என்ற விமர்சன கட்டுரையை டெக்னிகி என்ற இதழில் எழுதியதனால் 1989இல் வேலையை இழந்தார் [1][4][5].
1989-2013 காலகட்ட செயல்பாடு[தொகு]
1989 கோடைகாலத்தில் செக்கசுலோவியா தொலைக்காட்சியில் நாட்டின் மோசமான பொருளாதார நிலை குறித்து விமர்ச்சித்து பேசினார். தொலைக்காட்சியில் பேசின அவரின் கருத்துக்கள் சில மாதங்களுக்கு அப்பால் நடந்த மென்பட்டு புரட்சியின் போது அவரை குடிமை மன்ற தலைவர்களிடம் நெருக்கமாக உதவின.[6]
1990இல் இவர் செக்கசுலோவியா நாடுகளின் கூட்டமைவு பேரவையில் உறுப்பினர் ஆனார். 1992இல் செக்கசுலோவியா சமூக சனநாயகக் கட்சியில் இணைந்த இவர் அதன் சார்பாக கீழுவைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1993இல் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தொடர்ந்த ஆண்டுகளில் அக்கட்சியை நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றாக உயர்த்தினார்.
எதிர்பார்த்ததை விட 1996இல் நடந்த தேர்தலில் செக்கசுலோவியா சமூக சனநாயகக் கட்சி அதிக இடங்களை நாடாளுமன்றத்தில் பெற்றதால் இவரின் அரசியல் எதிரி வாசிலாவ் கிளாசு குடிமை சனநாயகக் கட்சியிடன் இணைந்து ஆட்சியைமைப்பதை தடுக்க முடிந்தது. இவர் செக்கசுலோவியா நாடாளுமன்றத்தின் சபைநாயகரகாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொருப்பில் 1998 நாடாளுமன்ற தேர்தல் வரை இருந்தார்.
1998இல் செக்கசுலோவியா சமூக சனநாயகக் கட்சி பெருவாரியான இடங்களை பெற்றதால் செக்கோசுலோவியான் பிரதம அமைச்சராக 4 ஆண்டுகள் பெரும்பான்மையற்ற அரசை வழிநடத்தினார். ஏப்பிரல் 2001இல் இவருக்கு பதில் விளாடிமிர் இசுபித்லா பொருப்பேற்றார்.[7] செமான் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி மேட்டுநிலப் பிரதேசத்தின் (Vysočina Region) ஊர்ப்புறத்தில் வாழ்ந்தார். 2002இல் செக்கசுலோவியா சமூக சனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் வென்றார்.ஆனால் வாசிலாவ் கிளாசிடம் அதிபர் போட்டியில் தோற்றார். தான் சார்ந்த கட்சியின் முன்னாள் தலைவர்களின் குறைகளை சுட்டிக்காட்டவும் விமர்சனம் செய்யவும் இவர் தயங்கியதில்லை. கட்சித்தலைவர் சிரி பரோமக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 21 மார்ச்சு 2007 இல் செக்கசுலோவியா சமூக சனநாயகக் கட்சியில் இருந்து விலகினார்.[8]
2009 அக்டோபரில் குடிகள் உரிமை கட்சியை தொடங்கினார்.[9] இக் கட்டி எத்தேர்தலிலும் ஒரு இடம் கூட வெல்லவில்லை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Miloš Zeman". novinky.cz. 29 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Wirnitzer, Jan (3 January 2013). "Neuděloval bych ani milosti, ani amnestie, napsal čtenářům Zeman". Mladá fronta DNES (Czech). 27 January 2013 அன்று பார்க்கப்பட்டது.
Miloš Zeman byl členem KSČ v letech 1968-1970. "Ještě krátce po okupaci byla naděje, že demokratizační proces v tehdejším Československu bude pokračovat. Tato naděje vyhasla až právě v roce 1970," vysvětlil to politik, kterého vyloučili právě pro nesouhlas s okupací.
CS1 maint: Unrecognized language (link) - ↑ Jurková, Marcela (24 January 2013). "Profil mladého Zemana: Inteligentní samotář, který se vždy rád poslouchal" [Profile of the young Zeman: an intelligent loner, who always liked to listen]. Hospodářské noviny. 4 May 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Byl mužem revoluce. 20 let poté Zemana nikam nepozvali – Aktuálně.cz
- ↑ Zeman, Miloš (August 1989). "Prognostika a přestavba". Technický magazín. 2007-02-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2018-01-31 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ ""Jistý prognostik" si dovolil kritizovat komunistické hospodářství" (Czech). Czech Television. 3 August 2010. 27 January 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "Miloš Zeman" (Czech). novinky.cz. 29 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 January 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "Zeman ukončil členství v ČSSD kvůli kauze Altner". Hospodářské noviny (Czech). 21 March 2007. 31 January 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "Zeman míří zpátky do politiky. Ve volbách nastoupí proti Paroubkovi". Lidové noviny (Czech). 31 December 2009. 31 January 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)