மிலா சிவாட்ஸ்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிலா சிவாட்ஸ்கா
2021 இல் மிலா சிவாட்ஸ்கா
பிறப்புமிலா ஒலெக்சிவ்னா சிவாட்ஸ்கா
3 திசம்பர் 1998 (1998-12-03) (அகவை 25)
கீவ், உக்ரைன்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது
உயரம்163 செ.மீ
பெற்றோர்ஒலெக்ஸி சிவாட்ஸ்கி
ஒக்ஸானா சிவாட்ஸ்கா

மிலா ஒலெக்சிவ்னா சிவாட்ஸ்கா (Mila Oleksiivna Syvatska, உக்ரைனியன்: Міла Олексіївна Сивацька; திசம்பர் 3, 1998 இல் உக்ரைனின், கீவ் நகரில் பிறந்தார்[1]) என்பவர் ஒரு உக்ரேனிய திரைப்பட நடிகை, உருசிய மிகுபுனைவு திரைப்படமான லாஸ்ட் நைட் என்ற படத்தில் வாசிலிசா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக நன்கு அறியப்பட்டவர்.[2][3]

வாழ்க்கை[தொகு]

இவர் தன் குழந்தைப் பருவத்தில் நடனத்தில் ஆர்வம் கொண்டவராக, ஆடிக்கொண்டு இருந்தார். 2011 இல், இவர் பெண்கள் இசைக்குழுவின் சார்பாக ஜூனியர் யூரோவிஷன் பாடல் போட்டிக்கான உக்ரேனிய தேசியப் போட்டியில் கலந்துகொண்டார்.[4] 2012 இல், இவர் உக்ரேனிய போட்டியான வாய்ஸ்: சில்ரன் என்ற பாடல் போட்டியில் கலந்துகொண்டார்.[1] இவர் ஒளிப்படங்களுக்கு வடிவழகியாக சிறுவயதில் பணிபுரிந்தார். இவரது அந்த ஒளிப்படங்களானது குழந்தைகள் பத்திரிகைகளின் அட்டைகள் போன்றவற்றில் இடம்பெற்றான. இவர் உக்ரைன் தொலைக்காட்சி நிகழ்ச்சியான யுஏ:ஃபர்ஸ்ட் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் இவர் தன் பத்து வயதிலிருந்தே படங்களில் நடித்து வருகிறார்.[1]

19 வயதில், இவர் உருசிய நகைச்சுவை விசித்திரக் கதையான லாஸ்ட் நைட் (2017) என்ற படத்தில் இல் முக்கிய பாத்திரத்தை ஏற்று நடித்தார். இப்படம் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு உருசிய திரைப்பட வரலாற்றில் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது.[5]

2022 ஏப்ரலில், உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பு குறித்த இவரது விமர்சனத்தின் காரணமாக சிவாட்ஸ்கா உருசிய கூட்டமைப்பின் எல்லைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Биография". Archived from the original on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  2. "Актриса Мила Сивацкая: 50 горячих фото, биография и личная жизнь". Archived from the original on 2022-06-30. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  3. Русские сказки по версии Disney: фильм «Последний богатырь»
  4. "Гурт «Флешки»-фінал Дитячого Євробачення 2011-Артек". Archived from the original on 2014-05-15. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
  5. Сказка «Последний богатырь» стала самым кассовым фильмом в истории российского кино
  6. «Известия» узнали, что в Россию запретили въезд Лободе, Сердючке и Дорну
  7. Светлане Лободе, Святославу Вакарчуку и Верке Сердючке запретили въезд в Россию на 50 лет

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலா_சிவாட்ஸ்கா&oldid=3913819" இலிருந்து மீள்விக்கப்பட்டது