மிம் குட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிம் குட் (Mim Kut) என்பது இந்தியா மற்றும் பர்மாவில் உள்ள சூ மக்களின் அறுவடைத் திருவிழாவாகும். இது வழக்கமாக ஆகத்து மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. மக்காச்சோளம், குறத்திப்பாசி மற்றும் சிறுதானிய முதல் அறுவடையின் போது நடைபெறுகிறது.[1]

தோற்றமும் வரலாறும்[தொகு]

மிம் குட் சோ மக்களின் பழமையான திருவிழாவாகக் கருதப்படுகிறது. இது இறந்தவர்கள் நினைவாகக் கொண்டாடப்படும் விழாவாகும்.[2] இந்த விழாவின் போது விருந்து ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் இந்த திருவிழாவின் போது எந்த வேடிக்கை மகிழ்ச்சியுடன் கூடிய நிகழ்வுகள் இல்லை.[3]

கொண்டாட்டம்[தொகு]

மிம் குட் மிகவும் ஆரவாரத்துடன் அரிசி-பீர் குடிப்பது, பாடுவது, நடனமாடுவது மற்றும் விருந்து வைப்பது போன்ற நடைமுறை மூலம் கொண்டாடப்படுகிறது. அறுவடையின் போது முதலில் அறுவடைச் செய்யப்படும் மாதிரிகள் இறந்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றன. இது 'அறுவடை திருவிழா' என அறியப்படுகிறது. விழாவின் சிறப்பம்சங்கள்/முக்கிய சடங்குகள்

குக்கி மக்கள் இந்த முக்கியமான குக்கி திருவிழாவின் பழங்கால மரபுகளை மதிக்கும் வகையில் விழாக்களை நடத்துகின்றனர். இறந்த தங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும் அவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். ஆடம்பரமான நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாடல்களுடன் கலை நிகழ்ச்சிகள் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த கலாச்சாரக் குழுக்களால் நிகழ்த்தப்படுகின்றன. பெரிய பாரம்பரிய மேளங்களை இசைத்தும், நீண்ட கொம்புகள் மற்றும் பிற வழக்கமான கருவிகளுடன் ஒத்திசைவான கேகோஃபோசு இசையுடன் கொண்டாடுகின்றனர். மிம்குட் மாநில திருவிழா, குக்கி சமுதாயத்தின் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தில் மக்கள் சேர அனுமதிக்கிறார். குக்கி மக்கள் தங்கள் இன கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் கலைகள் மூலம் தமது வெளிப்படுத்துகிறார்கள்.[4]

இந்த திருவிழா பிரமாண்டமான கொண்டாட்டமாக நடத்தப்பட்டாலும் மிம் குட் 2021-ஆம் ஆண்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பெரிய அளவில் அனுசரிக்கப்படாமல் இருந்தது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Barthakur, Dilip Ranjan (2003). The Music And Musical Instruments Of North Eastern India. Mittal Publications. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-881-5. https://books.google.com/books?id=oP4vH-4oSEcC&pg=PA55. பார்த்த நாள்: 8 August 2012. 
  2. Neihsial, Tualchin & History and Culture of the Zoumis, Manipur University (1993).
  3. "OVERVIEW OF MIZO FESTIVALS AND CEREMONIES" (PDF). shodhganga. பார்க்கப்பட்ட நாள் 20 September 2020.
  4. "Mim Kut Festival". utsav.gov.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-02-25.
  5. https://www.adotrip.com/festival-detail/mim-kut
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிம்_குட்&oldid=3665795" இலிருந்து மீள்விக்கப்பட்டது