மின்மினி (இதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பூவுலகு மின்மினி | |
---|---|
சுருக்கமான பெயர்(கள்) | மின்மினி |
துறை | சுற்றுச்சூழல் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | மருத்துவர் கு. சிவராமன் |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகம் | பூவுலகின் நண்பர்கள் (இந்திய ஒன்றியம்) |
வரலாறு | 2014 இல் தொடங்கப் பெற்றது. |
வெளியீட்டு இடைவெளி: | திங்கள் |
மின்மினி என்பது சென்னையிலிருந்து, தமிழில், மாணவர்களுக்காக வெளியாகும் சுற்றுச்சூழல் திங்கள் இதழ் ஆகும். இந்த இதழ், 2014ஆம் ஆண்டு பூவுலகின் நண்பர்களால் தொடங்கப் பெற்ற இதழ் ஆகும். மாணவர்களுக்குச் சுற்றுச்சூழலில் ஆர்வம், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இதழ் வடிவமைக்கப் பெற்றுள்ளது. இந்த இதழ் மாணவர்களைக் கவரும் வகையிலான மொழி, வண்ண அச்சீடு ஆகியனவற்றைக் கொண்டுள்ளது.
ஆசிரியர் குழு
[தொகு]மின்மினி இதழின் ஆசிரியர், மருத்துவர் கு. சிவராமன் ஆவார். இவ்விதழின் பொறுப்பாசிரியர் தேவிகாபுரம் சிவா ஆவார். இந்த இதழின் ஆசிரியர் குழுவில் அமிதா, டெக்சு, யாழினி, ஏ. சண்முகானந்தம், அருண் நெடுஞ்செழியன் ஆகியோர் உள்ளனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]மின்மினி இதழ் பரணிடப்பட்டது 2016-01-19 at the வந்தவழி இயந்திரம்