மினூ புருசோத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மினூ புருசோத்தம்
பிறப்பு20 நவம்பர் 1944 (1944-11-20) (அகவை 79)
பட்டியாலா, பஞ்சாப், இந்தியா
தொழில்(கள்)பின்னணிப் பாடகி
இசைத்துறையில்1963ம் ஆண்டு முதல்

மினூ புருசோத்தம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகியாவார். பிரபல சோப்ரானோ சகோதரிகளான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போன்ஸ்லே ஆகியோர் ஆதிக்கம் செலுத்திய காலத்தில் (1960-1970) இவரும் தனித்தன்மையுடன் கூடிய பல்வேறு இந்தி திரைப்பட பாடல்களைப் பாடியுள்ளார்.

திரைப்பட துறை[தொகு]

மினூ புருசோத்தமின் பின்னணிப்பாடல் வாழ்க்கை அவரது பதினாறாவது தாஜ்மஹால் வயதில் என்ற 1963 ம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படத்தில்  பழம்பெரும் இசையமைப்பாளர் ரோஷனின் இசையில், பாடகர் சுமன் கல்யாண்பூருடன் இரு நபர் பாடல் ஒன்றை பாடி தொடங்கியது.[1] இறுதியில், மினூ புருஷோத்தம் திரைப்படம் அல்லாத பாடல் தொகுப்புக்களைப் பாட விரும்பினார். திரையிசைப் பாடல்களை விட இந்த வகைப் பாடல்கள் மேலும் தீவிரமான தத்துவத்துடன் இன்னும் "அர்த்தமுள்ளதாக" இருக்கும் என்று எண்ணி, இந்தியாவை விட்டு வெளியேறி ஹூஸ்டனில் குடியேறினார், அங்கு ஹிந்துஸ்தானி குரலிசையை கற்பித்து வருகிறார்.[2]

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது பாடல் திரைப்படம் விளைவாக
1974 சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான பிலிம்பேர் விருது "ராத் பியா கே சங்" பிரேம் பர்வத் பரிந்துரை

பிரபலமான பாடல்கள்[தொகு]

பாடல் திரைப்படம் இணை பாடகர்
"தேகோ ஜி ஏக் பாலா" சைனா டவுன் (1962) முகமது ரஃபி
"உன்சே நஸ்ரீன் மிலி" கசல் (1964) லதா மங்கேஷ்கர்
"நி மைன் யார் மனனா நி" டாக் (1973) லதா மங்கேஷ்கர்
"ஹத் நா லகானா" தாஜ்மஹால் (1963) சுமன் கல்யாண்பூர்
"ஹுசுரேவாலா ஜோ ஹோ இஜாசத்" யே ராத் ஃபிர் நா ஆய்கி (1966) ஆஷா போஸ்லே
"ராத் பியா கே சங் ஜாகி ரே சகி" பிரேம் பர்பத் (1973)
"ஜானேவலோன் இதர் தேகோ" பத்லா (1974) ஆஷா போஸ்லே
"துர்கா ஹை மேரி மா" கிராந்தி (1981) மகேந்திர கபூர்

இசைப்பட்டியல்[தொகு]

  • மினோ புர்ஷோத்தம் ரஞ்ச் மெய்ன் ராஹத் (1980) [3]
  • ரெகுசார் கசல்ஸ் (1981)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Introducing Minoo Purushottam". mrandmrs55.com. பார்க்கப்பட்ட நாள் 31 October 2015."Introducing Minoo Purushottam". mrandmrs55.com. Retrieved 31 October 2015.
  2. "மினு புர்ஷோத்தம் யார்? முன்னாள் மாணவரின் பாராட்டு". mrandmrs55.com.
  3. "Minoo purshottam ranj mein raahat (ghazals) - 2392 922 by Minoo Purshottam, LP + 12inch with IndianVinylRecords". www.cdandlp.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மினூ_புருசோத்தம்&oldid=3708676" இலிருந்து மீள்விக்கப்பட்டது