உள்ளடக்கத்துக்குச் செல்

மிதவைவாழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மிதவைவாழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மிதவைவாழிகள்

நீர்நிலைகளிலோ நீர்பரப்புகளிலோ மிதந்து வாழும் உயிரினங்கள் மிதவைவாழிகள் (Plankton) அல்லது அலைவாழிகள் (மிதவைவாழி/அலைவாழி - ஒருமை) என அழைக்கப்படுகின்றன. இந்நீர்பரப்புகள் கடல்நீர், நன்னீர்ப் பரப்புகள் இரண்டுக்கும் பொதுவானதாகும்.

மிதவைவாழிகள் என வரையறுக்கப்படுவது அது வாழும் சூழ்நிலையை ஒத்து வரையறுக்கப்படுகின்றது. இவ்வரையறைக்கும் அதன் குணத்திற்கும் சம்பந்தமில்லை. இவை பெரும்பாலும் நீர்வாழ் பேருயிர்களுக்கு உணவாக பயன்படுகின்றன. இவற்றில் சிறிய பாக்டீரியாக்கள் முதல் பெரியதான சொறிமுட்டை வரை அடங்கியுள்ளன.

சிறப்பியல்புகள்

[தொகு]

மிதவைவாழிகள் பற்றற்று நீர்போனப் போக்கில் நகர்ந்துக் கொண்டே வாழக்கூடியது. இவைகளில் சில தனக்கு கொடுக்கப்பட்ட நகருறுப்புக்களை வைத்து நீரோட்டத்திற்கு செங்குத்தாக நகர்வதும் உண்டு. இவ்வாறு நீந்தும் உயிரானது சில நேரங்களில் பல தொலைவுகள் ஆழமாக நகரக்கூடியதாகவும் உள்ளது. இதற்கு அன்றாட எதிர் நகர்தல் (ஆங்கிலம் - டையல் வெர்டிகல் மைக்ரேசன்) என்று பொருள். நேர் நகர்தல் நீரினோட்டத்தைப் பொறுத்தது. நீரினோட்டத்திற்கு நேரெதிர் மாறாக நகர்பவனவும் உள (உதாரணம் - கனவாய், பாலூட்டிகள் ஆகியன). இதைப்பற்றியப் படிப்பு அலைவாழியியல்/மிதவைவாழியியல் எனப்படுகிறது. பெரும்பாலான கடல் மற்றும் நன்னீர் பாசிகள், கோபிப்போடுகள், இம்மிதவைவாழிகளே. இவைகளால் கடல் மற்றும் நீர்நிலைகளில் உணவு சுழற்சியே இல்லை என்று கூறலாம். இவை உணவு சுழற்சியில் அடிப்படை உற்பத்தியாளர்கள். இவைகளில் பெரும்பாலானவை இன்னும் அறியப்படாதவையே. குறிப்பாக சொறிமுட்டைகளைப் பற்றிய ஆய்வும் வளர்ச்சியும் மிகவும் குறைவு. மிதவைத்தாவரங்களில் குறைந்தது 200000 - 500000 வரையிலான வேறுபட்ட உயிர்கள் இருக்கலாம் எனவும் ஆனால் அறியப்பட்டது 25000த்திற்கும் குறைவேயாகும்.

பிரிவுகள்

[தொகு]

இவைகளை மூன்றாக வகைப்படுத்துகின்றனர். மிதவைவாழியாக வாழும் காலத்தைவைத்தும், அதில் உள்ள உயிர்களின் தன்மைகளை வைத்தும் மற்றும் அதன் அளவுகளை வைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன.

வாழும் காலம்

[தொகு]
  • முழுமிதவைவாழி - தன் வாழ்நாளில் மிதவைகளாக கடல் மற்றும் நீர் பரப்புகளிலேயே வாழ்கின்றன (சில் சொறிமுட்டைகள், பெரும்பாலான பாசிகள்)
  • பகுமிதவைவாழி - தன் வாழ்நாளில் பாதியை நீர்பரப்பிலும், மீதி நாட்களை கடல் மட்டத்திலும் கழிக்கிறது. இவைகள் குஞ்சுப்பருவத்தில் மிதவைகளாகவும், முதிர்ந்தவுடன் கடல் மட்டத்திற்கு நகர்ந்து அடியில் வாழ்கின்றன - உடுமீன்கள், ஓடுடைவாழிகள், கடற்புழுக்கள் மற்றும் பெரும்பாலான மீன்கள்.

தன்மை

[தொகு]
  • அலைதாவரம் (phytoplankton) - இதில் ஒளிசேர்வுயிரிகளான ஒளிசேர்பாக்டீரியா, பாசிகள் ஆகியன அடங்கும். இவை பெரும்பாலும் கடலின் மேற்பரப்பிலேயே இருக்கும். இவைகளில் ஈநகரிழையுயிரி/ஈர்கசைவாழி/ஈகசையுயிரி (Dinoflagellates), இருகலப்பாசி, நுண்பச்சைப்பாசி, நீலப்பச்சைப்பாசிகள் அடங்கும்.
  • அலைவிலங்கு (Zooplankton) - இதில் மூத்தவிலங்குகளும் ஏனைய விலங்கினங்களும் அடங்கும். இவை குறிப்பாக இவ்வலைத்தாவரங்களை உண்டு வாழ்கின்றன. இவைகளில் ஓடுடையுயிர்கள், சொறிமுட்டை ஆகியன அடங்கும்.
  • அலைபாக்டீரியா (Bacterioplankton) - இவைகளில் பாக்டீரியா மற்றும் ஆர்கிபாக்டீரியா அடங்கும். இவைகளில் நீலப்பச்சைப்பாசிகளும் அடங்கும்.
  • அலைத்தீநுண்மங்கள் (Virioplankton) - இவைகள் பெரும்பாலும் பாவுண்ணிகளாக இருக்கின்றன. இவைகள் பாக்டீரீயாவின் கட்டுப்பாட்டிற்கு துணைப்புரிகின்றன.

அளவு

[தொகு]
  • அதிபேர்மிதவைவாழி - 20mm அதிகமாக - சொறிமுட்டை
  • பேர்மிதவைவாழி - 2 லிருந்து 20 mm க்குள் ஏனைய சிறு நீர்விலங்கினங்கள், அலைவிலங்கி
  • சிறுமிதவைவாழி - 0.2 mm-2 mm - சிறு நீர்விலங்கினங்கள்
  • நுண்மிதவைவாழி - 20-200 µm - அலைதாவரம்
  • அதிநுண்மிதவைவாழி - 2-20 µm - இருகலப்பாசி மற்றும் ஏனைய சிறு வாழிகள்
  • பிகோநுண்மிதவைவாழி - 0.2-2 µm - பாக்டீரியாக்கள்
  • ஃப்ம்டோநுண்மிதவைவாழி - <0.2 µm - கடல் தீநுண்மங்கள் ஆகியன அடங்கும்.

முக்கியத்துவம்

[தொகு]

இவை பெரும்பாலான மீன்களுக்கு உணவு ஆதலால் இவைகளைப் பயன்படுத்துவதால் மீன்வளர்ப்பில் அதிக லாபம் காண முடியும். இவைகளிலிருந்து பல அறியப்பொருள்கள் பெறப்பட்டுள்ளன. நுண்பாசிகள் - உயிர்வாகன எண்ணெய் பயன்பாட்டு ஆராய்ச்சியில் உள்ளது.

பரவல்

[தொகு]
மிதவைவாழிகளின் உலகளாவிய பரவல்

இது பொதுவாக அனைத்து நீர்நிலைகளிலும் காணப்படுகிறது. மேலும் இவற்றின் பரவல் ஆனது பெருங்கடல்களில் அதிகமாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் சில நாட்கள் சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரையை ஒட்டிய கடல் பகுதியில் இந்த உயிரினங்கள் காணப்பட்டது. [1]

படக் காட்சியகம்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Plankton
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]

காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதவைவாழி&oldid=3285363" இலிருந்து மீள்விக்கப்பட்டது