பகுமிதவைவாழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பகுமிதவைவாழிகள் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் அலைவிலங்குகள் தன் வாழ்நாளில் பகுதியை மிதவைவாழிகளாகவும் பிற்பகுதியை கடலடியிலும் கழிக்கும். இதில் பெரும்பாலான முதுகெலும்பில்லா தொகுதியில் வரும் உயிரினங்கள் மற்றும் பெரும்பான்மையான மீன்குஞ்சுகள் இவற்றுள் அடங்கும். மேலும் சில இனங்களில் இவைச் சூழ்நிலைக்கேற்ப மாறுபடவும் செய்கிறது [1].

பண்புகள்[தொகு]

இவ்வாறு பெரும்பான்மையான கடலடி உயிர்கள் வாழ்நாளில் சிலப் பகுதியைக் கடற்பரப்புகளில் கழிக்கின்றன. இதில் பெரும்பான்மையான கடல் உயிரினக் குஞ்சுகள் அடங்கும். இவை 1 வாரம் முதல் 1 மாதம் வரை நீள்வதும் காணப்படுகிறது [2].

இதில் சில பாலிக்கீட்டேப் புழுக்கள் (கடற்புழுக்கள்), அலைவாழ்க்கையை மீண்டும் அதன் இனப்பெருக்காலத்தில் தேர்வுச் செய்து அங்கேயேக் கழிக்கின்றன. இவ்வாறு மிதவைவாழிகளாய் வாழும் மீன்குஞ்சுகள் மற்றும் ஏனைய கடலுயிரிகளின் குஞ்சுகள் முதிர்ந்த விலங்குகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுக் காட்சியளிக்கும். இக்குஞ்சுகள் வளர்ச்சியில் உருமாற்றம் பெற்று முதிர்ந்த விலங்குகளை ஒத்துக் காணப்படும். இவ்வாறுத் திரியும் குஞ்சுகளை இனம் காண்பதென்பது சிரமமான செயலாகும் [3].

இவ்வாறு பகுமிதவைவாழிகளாய் வாழும் குஞ்சுகள் நுண்ணலைத்தாவரங்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

பகுமிதவைவாழிகளாக வாழும் உயிர்களின் வகைப்பாடு கீழ்வரும் சட்டகத்திற்குள் கொடுக்கப்பட்டுள்ளது.

| align="center" style="background:#f0f0f0;"|தொகுதி | align="center" style="background:#f0f0f0;"|துணைக்குழு | align="center" style="background:#f0f0f0;"|எடுத்துக்காட்டு |- | நிடேரியன்கள் (Cnidaria)||||ஆரெலியா (Aurelia) |- | எகினோடெர்மேடா (echinodermata)||||நட்சத்திரமீன் குஞ்சுகள் |- | ||||கடற்குப்பிக் குஞ்சுகள் (Sea Urchin larvae) |- | வளைத்தசைப் புழுக்கள்||||பாலிக்கீட்டேக் குஞ்சுகள் |- | மெல்லுடலிகள் (Mollusca)||||நத்தைக்குஞ்சுகள் |- | கணுக்காலிகள் (Arthropoda)||பத்துக்காலிகள்||நண்டுக்குஞ்சுகள், கல்லிறால் குஞ்சுகள் |- | கார்டேட்டா (Chordata) ||முதுகெலும்பிகள்||மீன்முட்டை மற்றும் மீன்குஞ்சுகள் |- | |}

மேற்கோள்கள்[தொகு]

  1. Costlow JD and CG Bookout, 1969, Temperature and Meroplankton, Chesapeak Science, 10(3&4):252-257
  2. Belgrano A, Legendre P, Dewarumez J-M and S Frontier, 1995, Spatial structure and ecological variation of meroplankton in the French-Belgian coast of the North Sea, Mar Ecol Prog Ser, 128:43-50
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-07-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-05-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுமிதவைவாழி&oldid=3219230" இருந்து மீள்விக்கப்பட்டது