உள்ளடக்கத்துக்குச் செல்

மிட் ராம்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிட் ராம்னி
70வது மாசசூசெட்சு ஆளுநர்
பதவியில்
2 சனவரி 2003 – 4 சனவரி 2007
Lieutenantகெர்ரி ஹீலி
முன்னையவர்ஜேன் எம். சுவிஃப்டு(பொறுப்பு)
பின்னவர்தேவல் பாட்றிக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வில்லர்டு மிட் ராம்னி

மார்ச்சு 12, 1947 (1947-03-12) (அகவை 77)
டெட்ராய்ட், மிச்சிகன், ஐ.அ.
அரசியல் கட்சிகுடியரசு
துணைவர்
ஆன் ராம்னி]] (தி. 1969)
பிள்ளைகள்டக்கார்டு (பி. 1970)
மாத்தியூ (பி. 1971)
ஜோஷூவா (பி. 1975)
பெஞ்சமீன் (பி. 1978)
கிரெய்க் (பி. 1981)
வாழிடம்(s)பெல்மாண்ட், மாசசூசெட்சு
வுல்ஃப் பரோ, நியூ ஹாம்சையர்
சான் டியாகோ, கலிஃபோர்னியா
முன்னாள் கல்லூரிபிரிகாம் யங் பல்கலைக்கழகம் (இளங்கலை)
ஹார்வர்டு பல்கலைக்கழகம் (எம்பிஏ, சட்டம்)
PositionsCo-founder, Bain Capital (1984–1999)
CEO, Bain & Company (1991–1992)
CEO, 2002 Winter Olympics Organizing Committee (1999–2002)
கையெழுத்துSignature "Mitt Romney", first name more legible than last name
இணையத்தளம்MittRomney.com

வில்லார்டு மிட் ராம்னி (Willard Mitt Romney,பிறப்பு: மார்ச் 12, 1947) ஓர் அமெரிக்க வணிகரும் 2012 தேர்தலில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளராக நியமிக்கப் பட்டுத் தோல்வியடைந்தவரும் ஆவார்.[1] 2003 முதல் 2007 வரை மாசசூசெட்சு மாநிலத்தின் எழுபதாவது ஆளுநராக பணியாற்றி உள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

ஜார்ஜ் ராம்னி மற்றும் லெனோர் ராம்னி தம்பதியினருக்கு மகனாக மார்ச் 12, 1947 ஆம் ஆண்டு மிச்சிகனில் பிறந்தார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுகொண்டிருந்தபோதே 1966 ஆம் ஆண்டு தனது கல்வியை இடைமுறிவு செய்து மோர்மன் மிஷனரியின் இறைப்பணியாளராக தொண்டாற்ற பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றார். 1969 ஆம் ஆண்டு ஆன் டேவிஸ் ஏன்டா பெண்ணை மணந்தார். இந்த தம்பிதிகளுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. 1971 ஆம் ஆண்டு பிரிகாம் யங் பல்கலைக்கழகத்தில், ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1975 ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை பயின்று பேக்கர் ஸ்காலர் (Baker scholar) எனப்படும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றர். பெயின் & கம்பெனி என்னும் நிறுவனத்தில் பணிபுரிந்து பின் 1984 ஆம் ஆண்டு பெயின் காபிடல் என்ற நிதி சார்ந்த நிறுவனத்தை தொடங்கினார். பின்னாளில் இது தேசிய அளவில் கவனிக்கத்தக்க நிறுவனமாக வளர்ந்தது. இது தவிர இவர் சர்ச் ஆப் ஜீஸஸ் கிரிஸ்ட் ஆப் லேட்டர்-டே செயின்ட் (The Church of Jesus Christ of Latter-day Saints) என்னும் மத அமைப்பில் வார்டு பிஷப் (Ward Bishop) தொடங்கி ஸ்டேக் பிரசிடென்ட் (Stake President) வரை சில பதவிகள் வகித்தார்.

அரசியல் வழக்கை

[தொகு]

2002 ஆம் ஆண்டு மாசச்சூசெட்ஸ் மாகாண ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2008 ஆம் ஆண்டு தேர்தளின் பொது குடியரசுக் கட்சி வேட்பாளராவதற்கு சக கட்சிக்காரரான ஜான் மெக்கெய்ன் என்பவருடன் போட்டியிட்டார். ஆனால் இறுதியில் ஜான் மெக்கைன் வேட்பளராகும் தகுதியைப் பெற்றார். தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு ரான் பால் மற்றும் பிரட் கார்கர் போன்றோருடன் போட்டியிட்டு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகும் தகுதியைப் பெற்றுள்ளார். நவம்பர் 6, 2012ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பராக் ஒபாமாவிடம் தோல்வியடைந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "ஒபாமா மீண்டும் அதிபரானார்". வலம்புரி. 08 நவம்பர் 2012. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 08 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
அலுவல்
பிற
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிட்_ராம்னி&oldid=3578052" இலிருந்து மீள்விக்கப்பட்டது