மிசெல் ஒபாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிசெல் ஒபாமா
Michelle Obama 2013 official portrait.jpg
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 20, 2009 – சனவரி 20, 2017
குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா
முன்னவர் லோரா புஷ்
பின்வந்தவர் மெலனியா திரம்ப்
தனிநபர் தகவல்
பிறப்பு மிசெல் லவான் இராபின்சன்
சனவரி 17, 1964 (1964-01-17) (அகவை 59)
டெயங், இலினொய், ஐ.அ.
(தற்போது காலுமெட் பூங்கா)
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) பராக் ஒபாமா (தி. அக்டோபர் 3, 1992)
பிள்ளைகள் மாலியா
சாஷா
படித்த கல்வி நிறுவனங்கள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
சமயம் சீர்திருத்தத் திருச்சபை (விவரங்களுக்கு)
கையொப்பம்

மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா (Michelle LaVaughn Robinson Obama, பிறப்பு: சனவரி 17, 1964) அமெரிக்க வழக்கறிஞரும், எழுத்தாளரும் ஆவார். ஐக்கிய அமெரிக்காவின் 44வது குடியரசுத் தலைவரான பராக் ஒபாமாவின் மனைவியும், முதலாவது ஆபிரிக்க-அமெரிக்க முதல் சீமாட்டியும் ஆவார். சிகாகோவின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை சிட்லி ஆசுட்டீன் என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பின்னர் சிகாகோ நகர முதல்வர் ரிச்சர்டு எம் டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.

2007, 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், ஊட்டச்சத்து, உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.[1][2]

எழுதிய புத்தகங்கள்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. Donahue, Wendy. "Michelle Obama emerges as an American fashion icon". Chicago Tribune. http://www.chicagotribune.com/shopping/chi-michelle-obama-1112_qnov12,0,5421281.story. பார்த்த நாள்: June 4, 2011. 
  2. "Michelle Obama settling in as a role model". The Washington Times. June 4, 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

கௌரவப் பட்டங்கள்
முன்னர்
லோரா புஷ்
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
2009–2017
பின்னர்
மெலனியா திரம்ப்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசெல்_ஒபாமா&oldid=3581909" இருந்து மீள்விக்கப்பட்டது