மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நீலகிரி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நீலகிரி பரணிடப்பட்டது 2017-11-09 at the வந்தவழி இயந்திரம்
[தொகு]மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (District Institute of Education and Training -DIET) நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி உள்ளது .இந்நிறுவனம் 1992 ஆம் கல்வி ஆண்டில் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளித்தல்,பணிமுன் பயிற்சி அளித்தல்,பாட புத்தகங்கள் வடிவமைத்தல் போன்ற கல்விசார் பணிகளை மேற்கொள்கிறது.
அமைப்பு
[தொகு]மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,நீலகிரி பரணிடப்பட்டது 2017-11-09 at the வந்தவழி இயந்திரம் கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் இயங்கிவருகிறது.
ஏழு கிளைகள்
[தொகு]- பணிமுன் பயிற்சி
- பணியிடைப் பயிற்சி
- பணிஅனுபவக் கல்வி
- மாவட்ட வள அலகு
- திட்டமிடலும் மேலாண்மையும்
- கலைத்திட்டம் பாடப்பொருள் உருவாக்கம் மதிப்பிடுதல்
- கல்வி நுட்பவியல்
ஏழு கிளைகளின் செயல்பாடுகள்
[தொகு]பணிமுன் பயிற்சி பிரிவு
[தொகு]- ஆசிரியர் கல்வியை அளித்தல், அதாவது மேனிலைக்கல்வியில்(பனிரெண்டாம் வகுப்பு)தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியரை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்து இரண்டாண்டுக் கல்வியாக வழங்கப்படுகிறது.இவர்கள் 1முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் தகுதியைப் பெறுவர்.
- கற்போரை மையமாகக் கொண்ட கல்வியையும், ஆளுமை வளர்ச்சிக்கான கல்வியையும் நன்னெறி பண்பாட்டுக் கல்வியையும் மற்றும் கற்றல் பொருள் துணைக்கருவிகள் தயாரித்தல் மற்றும் பயன்படுத்தலையும் ஆராய்ச்சி வாயிலாக பரப்புதல்.
- கற்பிக்கும் முறைகளை கவனித்தல்.
- உளவியல் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்.
பணியிடை பயிற்சி பிரிவு
[தொகு]- மாவட்டம் முழுமையிலுள்ள தொடக்ககல்வி,உயர்நிலை, மேல்நிலை கல்வி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கருத்தாளர்கள், இவர்களுக்கு திட்டமிட்டு பணியிடைப் பயிற்சி அளித்தல்.
- புதுமைப் புனைதல், தொடர் ஆராய்ச்சிக்கு இணைப்பு மையமாகத் திகழ்தல், பருவ இதழ்கள், செய்தி மடல் வெளியிடல்.
மாவட்ட வள அலகு பிரிவு
[தொகு]- பயிற்சி நிறுவனத்திற்கு வெளியே மாவட்டம் முழுமைக்கும் நடைபெறும் முறைசாராக் கல்வி, மற்றும் முதியோர் கல்விக்காக திட்டமிடுதல், இணைப்பாளராக இருத்தல்.
- ஊக்குநர், கருத்தாளர், மேற்பார்வையாளர் ஆகியோருக்கு பயிற்சி அளித்தல்.
திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரிவு
[தொகு]- பல்வேறு மாவட்டத் திட்டங்களுக்கு ஏற்ப புள்ளிவிவர அடிப்படையில் விவரங்களைத் திரட்டி பாதுகாத்தல்.
- கல்வி திட்டமிடுவோர், நிர்வாகம் செய்வோர்களுக்குத் தேவையான பள்ளிச்சேர்க்கை, பள்ளியை விட்டு நின்றுவிடல், வயது வந்தோர் கல்வி, பெண்கல்வி, தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையோர், ஊனமுற்றோர், இடையுறுகள், கல்வி நிலையங்களை மதிப்பிடுவதற்கரிய உத்திகள், போன்றவைகளுக்குத் தேவையான திட்டங்களை வழங்குதல்.
- பள்ளி பாடங்களை உருவாக்கல், நுண்ணிலைத்திட்டமிடுதல், பள்ளி ஒருங்கிணைப்பு உருவாக்கல் போன்றவற்றில் கல்வி அதிகாரிகளுக்கு உதவி செய்தல்.
பணி அனுபவப் பிரிவு
[தொகு]- வேலை அனுபவக் கல்விக்க ஏற்ப உள்ளுர் துளைகளைத் தேர்ந்தெடுத்தல், கலைத்திட்ட அலகுகளை வளர்த்தல், கற்றல் கற்பித்தல் பொருட்கள், மலிவு விலை துணைக்கருவிகள், மதிப்பீட்டுக் கருவிகள் போன்றவைகளைத் தயார் செய்தல்.
- பயிற்சி நிறுவன எல்லைக்குள் உள்ள விடுதிகள், விளையாடும் இடம், சாலை, தோட்டம், சுற்றுப்புறத் தளவாடப் பொருட்கள் இவற்றின் துாய்மையைப் பேணுவதற்கான செயல்களை அமைத்தல்.
கல்வி நுட்பவியல் பிரிவு
[தொகு]- பயிற்சி நிறுவனத்திற்கு மற்ற பிரிவுகளில் பணிபுரிவோர் மற்றும் கருத்தாளர்களின் ஒத்துழைப்புடன் எளிய, பயன்மிகு மலிவு விலை துணைக்கருவிகளைப் பல்வேறு பாடங்களுக்கும், தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்விக்கும், விளக்கப்படங்கள், மாதிரிகள், வரைபடங்கள், பதிவுநாடா, பாடல்கள், நழுவங்கள் போன்றவற்றை தயார் செய்தல்.
- மலிவு விலை துணைக்கருவிகள் தயாரிப்பதற்கான பணிப்பட்டறை நடத்துதல்.
- கல்வி தொழில்நுட்பத்தை கல்வி செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்குப் பணியிடைப்பயிற்சி நடத்துதல்.
- நிறுவனக் காட்சி கேள்விக் கருவிகளைப் பாதுகாத்தல்.
கலைத்திட்டம், கற்றல் பொருள் உருவாக்கம் மற்றும் மதிப்பிடுதல் பிரிவு
[தொகு]- உள்ளுர் சூழ்நிலைக்கேற்ப தொடக்கக் கல்விக்கும், ஆசிரியர்களுக்கான திட்டங்களுக்கும், நடைமுறையில் உள்ளவைகளுக்கு புதியனவைகளைக் கண்டுபிடித்து வளர்த்தல், கலைத்திட்டத்திற்கு துணைபுரியும் துணைநுால்களை தயாரித்தல்.
- தேர்வு வினா வங்கி, தர அளவீடு, உற்றுநோக்குதல், குறை கண்டுணரும் தேர்வு, குறை நீக்கக் கற்பித்தல், திறன்மிகு மாணவர்களைக் கண்டுபிடித்தல் போன்றவைகளுக்கு வழிகாட்டும் குறிப்புகளை அளித்தல் (பணிப்பட்டறை மூலம்) பணியிடைப் பயிற்சி அளித்தல்.
பணியிடங்கள்
[தொகு]கல்வியாளர்கள்
[தொகு]- முதல்வர் - 1 (பொறுப்பு)
- விரிவுரையாளர்கள் - 4
அலுவலகப் பணியாளர்கள்
[தொகு]அலுவலகப் பணியாளர்கள் - 10
மாணவ - மாணவிகளின் சேர்க்கை எண்ணிக்கை
[தொகு]- முதலாமாண்டு - 28
- இரணடாமாண்டு - 33