உள்ளடக்கத்துக்குச் செல்

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தருமபுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தருமபுரி என்ற நிறுவனமானது 2007 செப்டம்பர் 3 அன்று தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது.

இருப்பிடம்

[தொகு]

இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் மாநிலம், தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை நீலாபுரத்திற்கு அருகில் கொசபட்டி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது மாவட்ட தலை நகரில் இருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.https://www.google.com/search?client=ms-opera-mini-android&q=DIET,+DHARMAPURI+Kosapatti,+Tamil+Nadu&ludocid=13642753108626570937&lsig=AB86z5XM5B89XqVy3_WxsX6P1OCt&sa=X&ved=2ahUKEwjki_rMjZTtAhWy4jgGHWfQDIsQvS4wAHoECAoQBA#

நிறுவனத்தில் உள்ள துறைகள்

[தொகு]

இந்த நிறுவனம் தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் அங்கிகாரம் பெற்று, மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் ஏழு துறைகள் உள்ளன, அவை

  • பணி முன் பயிற்சி
  • பணியிடைப் பயிற்சி
  • கல்வி நுட்பவியல்
  • கலைக்கல்வி மற்றும் பணி அனுபவம்
  • மாவட்ட வளங்கள் அலகு
  • கலைத்திட்ட உருவாக்கம்
  • திட்டமிடல் மற்றும் மேலாண்மை.

பணியாற்றும் கல்வியாளர்கள்

[தொகு]

இந்த நிறுவனத்தில் முதல்வர், ஒரு முதுநிலை விரிவுரையாளர், எட்டு விரிவுரையாளர்கள் மற்றும் இரண்டு அலுவலக பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பிற விவரங்கள்

[தொகு]

இந்த நிறுவனத்தில் உள்ள பணி முன் துறையில் 19 மாணவர்கள் ஆசிரியர் கல்வி பயில்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பணிமுன் பயிற்சியாக தொடக்க கல்வி பட்டய படிப்பு இரண்டாண்டு பயிற்சி வழங்கப்படுகிறது. அங்கன்வாடி ஆசிாியா் முதல் பன்னிரன்டாம் வகுப்பு முதுகலை ஆசிாியா் வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி மற்றும் கற்பித்தல் சார்ந்த பயிற்சிகளை வழங்கி வருகிறது.

மேற்கோள்

[தொகு]