மாலதி (தமிழ்ப் போராளி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2வது லெப்டினன்ட் [1]
மாலதி
பிறப்பு(1967-01-04)4 சனவரி 1967
மன்னார்[1]
இறப்பு10 அக்டோபர் 1987(1987-10-10) (அகவை 20)
கோப்பாய், யாழ்ப்பாணம்
தேசியம்தமிழ் ஈழம்
பணிதமிழ்ப் போராளி
அறியப்படுவதுமுதல் பெண் போராளி

மாலதி (Malathi) என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் சகாயசீலி பேதுருப்பிள்ளை என்பவர் போரில் இறந்த விடுதலைப் புலிகளில் முதல் பெண் போராளி. எனவே முதல் பெண் ஈகியாக இவர் போற்றப்படுகிறார். இவரது நினைவு நாள் மகளிர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.

1987ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள், யாழ்ப்பாணத்திற்கு அருகில் கோப்பாயில் இந்திய அமைதிப்படைக்கு எதிரான படை நடவடிக்கையின்போது மகளிர் படைப்பிரிவினரை வழிநடதிய மாலதி காயமடைந்தார். மிகக் கூடுதலான ஆயுத ஆற்றலைக் கொண்ட இந்திய அமைதிப் படை வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும், இவரது குழு வெற்றிகரமாக இந்திய அமைதிப் படையைத் தடுத்து. மேலும் இந்திய அமைதிப்படையை திரும்பிப் போக கட்டாயப்படுத்தியது. போரில், இவளது சக போராளி மகளிர் இவரை மீட்டபோது இவருக்கு மிகுந்த இரத்தப்போக்கு ஏற்பட்டு அசையாமுடியாத நிலையில் இருந்தார். மோசமான சூழ்நிலையை நிலவுவதை உணர்ந்த மாலதி, வீராங்கனைகள் தன்னை விட்டுச் சென்று சண்டையிடச் செல்ல வேண்டும் என்று விரும்பினார். பின்னர் இராணுவத்திரால் பிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக சயனைடு குப்பியைக் கடித்து இறந்தார். விடுதலைப் புலிகள் மாலதியை கௌரவிக்கும் நோக்கில் தங்கள் படையணியில் ஒன்றுக்கு மாலதி படையணி என பெயரிட்டனர். மேலும் கிளிநொச்சியில் இவருக்குகாக ஒரு நினைவுச்சின்னம் கட்டப்பட்டு 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் திறக்கப்பட்டது.[2][3][4][5][6][7][8][9][10][11][12][13][14][15]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "TamilNet: 10.10.04 Jaffna observes Malathi death anniversary". TamilNet. 10 Oct 2004. பார்க்கப்பட்ட நாள் 19 Nov 2023.
  2. Dr Annelou Ypeij; Ms Reinhilde König; Professor Georg Frerks (28 October 2014). Gender and Conflict: Embodiments, Discourses and Symbolic Practices. Ashgate Publishing, Ltd.. பக். 123–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4724-0461-9. https://books.google.com/books?id=pi7jBAAAQBAJ&pg=PT123. பார்த்த நாள்: 10 October 2015. 
  3. Thanh-Đạm Trương; Saskia Wieringa; Amrita Chhachhi. Engendering human security: feminist perspectives. Zed Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84277-778-7. https://books.google.com/books?id=MZWyAAAAIAAJ. 
  4. "LTTE commemorates first woman martyr". தமிழ்நெட். 10 October 2003. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  5. Jimmie Briggs (1 April 2009). Innocents Lost: When Child Soldiers Go to War. Basic Books. பக். 66–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7867-3850-2. https://books.google.com/books?id=EkqIL8H53P4C&pg=PT66. பார்த்த நாள்: 10 October 2015. 
  6. "Women's Awakening Day celebrated in NE". தமிழ்நெட். 11 October 2003. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  7. "LTTE hails Malathy and gender equality". Daily Mirror. 11 October 2003. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  8. "முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வணக்க நாள் இன்றாகும்". irruppu.com. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  9. "MaaVeerar - மாவீரர் அணையாத தீபங்கள் Malathi - First Woman Martyr". Tamil Nation. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  10. "Jaffna observes Malathi death anniversary". தமிழ்நெட். 10 October 2004. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  11. "Remembering Maalathy". Tamil Guardian. 10 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  12. Dr Paige Whaley Eager (28 March 2013). From Freedom Fighters to Terrorists: Women and Political Violence. Ashgate Publishing, Ltd.. பக். 141–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4094-9857-5. https://books.google.com/books?id=WQ2UytrgOkIC&pg=PA141. பார்த்த நாள்: 10 October 2015. 
  13. "Malathy Memorial opened in Kilinochchi". தமிழ்நெட். 10 October 2004. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  14. "Denmark Tamil schools compete in Malathy Cup football tournament". Tamil Guardian. 21 February 2015. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
  15. "Tamil Tiger rebels honor their female fighters in Sri Lanka". AP Worldstream. October 12, 2002. Archived from the original on April 18, 2016. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015 – via HighBeam.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_(தமிழ்ப்_போராளி)&oldid=3940488" இலிருந்து மீள்விக்கப்பட்டது