உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ட்டினேர் பறப்பு எண் 138

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டினேர் பறப்பு எண் 138
பறப்பு எண் 138 தரைப்பகுதியுடன் மோதுவதைக் காட்டும் கணினி வரைகலைப் படிமம்.
விபத்து சுருக்கம்
நாள்திசம்பர் 4, 1974
சுருக்கம்கட்டுப்பாட்டிலுள்ள பறப்பு தரையுடன் மோதல்
இடம்மாசுகேலியா, இலங்கை
பயணிகள்182
ஊழியர்9
உயிரிழப்புகள்191 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைமக்டொனால் டக்ளஸ் டிசி-8-55எஃப்
இயக்கம்கருடா இந்தோனேசியா சார்பாக மார்ட்டினேர்
வானூர்தி பதிவுPH-MBH
பறப்பு புறப்பாடுயுவாந்தா பன்னாட்டு வானூர்தி நிலையம், சுராபயா, இந்தோனேசியா
சேருமிடம்பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம், கொழும்பு, இலங்கை

மார்ட்டினேர் பறப்பு 138 இந்தோனேசியாவின் சுராபயாவிலிருந்து இலங்கையின் கொழும்பிற்கு பறந்த ஒப்பந்த வான்வழிப் பயணமாகும். இந்தப் பயணம் கருடா இந்தோனேசியாவிற்காக இயக்கப்பட்டது. திசம்பர் 4, 1974 அன்று மக்டொனால் டக்ளஸ் டிசி-8-55எஃப் வானூர்தி இறங்குவதற்கு சற்று முன்னதாக மலையில் மோதி வானூர்தியிலிருந்த 191 பேருமே உயிரிழந்தனர். இவர்களில் 182 பேர் மக்காவிற்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தோனேசியர்களும் வானூர்தி பணியாளர்கள் 9 பேரும் அடங்குவர்.[1]

இந்தோனேசியாவின் சுராபயாவை விட்டு ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் 12.03 மணிக்கு ஜெட்டா நோக்கி இலங்கையின் பண்டாரநாயக்க வானூர்தி நிலையம் வழியாக பயணிக்கத் தொடங்கியது. ஒ.அ.நே 16.30க்கு கொழும்பு கட்டுப்பாட்டகம் பறப்பை அனுமதித்தது. ஒ.அ.நே 16.38க்கு மற்றொரு வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் குறுக்கிட்டு வானூர்தியை 8000அடிக்குப் பதிலாக 5000 அடி உயரத்தில் பறக்க அனுமதித்தார். கொழும்பு இறங்கு கட்டுப்பாடு 16.44க்கு 2000 அடிக்கு இறங்க அனுமதித்து ஓடுபாதை 04இல் இறங்க ஆயத்தமாகுமாறு கூறியது. வானூர்தி ஓட்டுநர்கள் வானூர்தி நிலையம் கட்புலனாகும்போது தொடர்பு கொள்ள வேண்டப்பட்டனர். ஓட்டுநர்கள் கீழறங்கத் துவங்கி கொழும்பிற்கு கிழக்கில் 40 nm இருக்கும்போது ஏறத்தாழ 4,355 அடியில் சப்த கன்னியா மலையில் மோதினர். வானூர்தியிலிருந்த 191 பயணிகளும் பணியாளர்களும் உயிரிழந்தனர். இலங்கையின் வான்போக்குவரத்து வரலாற்றில் இதுவே மிகவும் மோசமான விபத்தாக அமைந்துள்ளது.

அமைவிடம்

[தொகு]
கன்னி மலை (சப்த கன்யா) பகுதியின் விரிகாட்சித் தோற்றம்.

இலங்கையின் மாசுகேலியாவில் தெர்பர்டன் தோட்டத்தில் "சப்த கன்னியா" என அறியப்படும் மலைத்தொடரில் ஐந்தாவது குன்றின் மீது வானூர்தி மோதி விபத்துக்குள்ளானது. கட்டுநாயக்கவின் பண்டாரநாயக்க வானூர்தி நிலையத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் விபத்து ஏற்பட்டது.[2]

ஊர்மக்கள் விபத்து நடந்த இடமாக சுட்டுமிடம்

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "Martinair: History". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.
  2. "Report on the Accident to Martinair DC 8 PH-MBH on 4th December 1974 at Theberton Estate, Maskeliya, Sri Lanka." Sri Lanka Ministry of Transport Department of Civil Aviation () - Posted on the website of the Civil Aviation Authority of Sri Lanka. p. 1 (Part 1.1.1 Location). Retrieved on 4 June 2013.