மார்கோசு நோகுவேரா எபர்லின்
மார்கோசு நோகுவேரா எபர்லின் Marcos Nogueira Eberlin | |
---|---|
பிறப்பு | மார்ச்சு 4, 1959 |
வாழிடம் | பிரேசில் |
தேசியம் | பிரேசில் |
துறை | வேதியியலாளர் |
பணியிடங்கள் | காம்பினாசு பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | காம்பினாசு பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பொருண்மை நிறமாலை |
மார்கோசு நோகுவேரா எபர்லின் (Marcos Nogueira Eberlin) பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு வேதியியலாளர் ஆவார். பிரேசில் நாட்டிலுள்ள காம்பினாசு பல்கலைக்கழக வேதியியல் நிறுவனத்தின் பேராசிரியராகவும் இருந்தார். 1959 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி இவர் பிறந்தார். [1] பிரேசிலிய அறிவியல் கல்விக் கழகத்தின் உறுப்பினராக உள்ள இவர் 2005 ஆம் ஆண்டு பிரேசிலிய தேசிய அறிவியல் அறிஞர் தகுதியையும் 2016 ஆம் ஆண்டு தாம்சன் பதக்கத்தையும் பெற்றார்.
எரிவாயு நிலை அயனி வேதியியலில் தனது ஆய்வுப் பணியின் போது எபர்லின் வினை என்ற வேதி வினையை எபர்லின் கண்டுபிடித்தார். இவரும் இவரது ஆய்வுக் குழுவும் பொருண்மை நிறமாலை அளவீடுகளில் பயன்படுத்தப்படும் அயனியாக்கம் தொடர்பான நுட்பத்தை (எளிய சுற்றுச்சூழல் ஒலி தெளிப்பு அயனியாக்கம்) அறிமுகப்படுத்தினர். [2]
பிரேசிலின் அறிவார்ந்த வடிவமைப்புக் கோட்பாட்டை எபர்லின் ஆதரித்தார். அதாவது அறிவியல் முறைகளுக்கு இணக்கமில்லாத ஆனால் அறிவியல் மற்றும் உண்மைகள் சார்ந்த நம்பிக்கைகள், அறிக்கைகள் தொடர்பான விரிவுரைகளையும் இவர் வழங்கினார். டார்வினிசத்தை எதிர்க்கும் கருத்து வேறுபாட்டு அறிக்கையில் எபர்லின் கையெழுத்திட்டார். [3][4] மேலும் இவர் ஒரு படைப்பாளியும் ஆவார். பரிணாமக் கோட்பாடு ஒரு தவறான கோட்பாடு என்பது இவர் கருத்தாகும். [5]
இவரது மகள், லிவியா எசு. எபர்லின்[6] என்பவரும் ஒரு வேதியியலாளர் ஆவார். புற்றுநோயைக் கண்டறிய பொருண்மை நிறமாலையைப் [7] பயன்படுத்துவது குறித்த ஆராய்ச்சிக்காக 2018 ஆம் ஆண்டு மேக் ஆர்தர் உறுப்பினர்கள் திட்டத்தில் "மேதை " பரிசை இவர் வென்றார். கள்ளப் பணத்தைக் [6] கண்டறிய பொருண்மை நிறமாலையைப் பயன்படுத்தும் திட்டத்தில் எபெர்லின் மற்றும் அவரது மகள் இருவரும் இணைந்து பணியாற்றினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Academia Brasileira de Ciências". Archived from the original on 2016-06-20.
- ↑ "Easy ambient sonic-spray ionization mass spectrometry combined with thin-layer chromatography". Anal. Chem. 80 (8): 2744–50. 2008. doi:10.1021/ac702216q. பப்மெட்:18331004.
- ↑ "A Scientific Dissent from Darwinism (List)".
- ↑ "A Scientific Dissent from Darwinism". Archived from the original on 2015-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-09-29.
- ↑ "Biólogos querem reforçar ensino da evolução - Saúde - Estadão". Estadão. http://saude.estadao.com.br/noticias/geral,biologos-querem-reforcar-ensino-da-evolucao,866626.
- ↑ 6.0 6.1 Bradley, David (2010), "Counterfeit Spectroscopy", ChemViews Magazine, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/chemv.201000020
- ↑ Wyllie, Julian (October 4, 2018), "Meet the Academics Who Nabbed This Year's MacArthur 'Genius' Grants", The Chronicle of Higher Education
வெளி இணைப்புகள்
[தொகு]- Page at University of Campinas
- Waters Biography பரணிடப்பட்டது 2017-03-24 at the வந்தவழி இயந்திரம்