உள்ளடக்கத்துக்குச் செல்

கள்ள நோட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கள்ள நோட்டு (Counterfeit money) என்பது ஒரு நாட்டில் வழக்கமாக பணத்தை அச்சடிக்கும் வங்கி அல்லது அரசு நிறுவனத்தைத் தவிர மற்றவர்கள் வெளியிடும் போலிப் பணம். பணத்தைக் காசுகளாக அச்சடித்த பழங்காலத்திலேயே போலிக் காசுகள் அடிக்கப்பட்டன. காகிதப் பணம் அச்சடிக்கப்பட்டது கள்ள நோட்டு உருவாக்குவதை எளிதாக்கியது. இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்கள் இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அமெரிக்கப் பணத்தைப் போலியாக வெளியிட்டனர். இது அந்நாடுகளின் பொருளாதாரத்தைப் பலமிழக்கச் செய்யும் எண்ணத்திலான செயல்.

இந்தியாவில் 500 மற்றும் 1000 உரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி கள்ள நோட்டுப் புழக்கத்தைக் குறைக்கும் முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கள்ள நோட்டுகளைக் கையாளுதல் குறித்த ரிசர்வ் வங்கி வழிமுறைகள்". பார்க்கப்பட்ட நாள் April 14, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ள_நோட்டு&oldid=1368741" இலிருந்து மீள்விக்கப்பட்டது