மாரி செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரி செல்வராஜ் (Mari Selvaraj) எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். பரியேறும் பெருமாள் என்ற தமிழ்த் திரைப்படத்தை இயக்கியுள்ளார். தற்போது கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். 10 வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ராமிடன் உதவி இயக்குனராக பணி புரிந்தவர். பத்திரிக்கையாளராக சில வருடங்கள் பணியில் இருந்தவர், ஆனந்த விகடனில் "மறக்க நினைக்கிறேன்" என்ற தொடரை எழுதியவர்.[1][2]

துவக்க வாழ்கை[தொகு]

மாரி செல்வராஜ் திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்தார். வறட்சிகாலங்களில் இவரது தந்தை வெளியூர்களுக்குச் சென்று வேடமிட்டு ஆடியிருக்கிறார். சென்னைக்கு வந்து ராமிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, மூன்று படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கினார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. முதல் படம் அல்ல, முதல் கோபம் - சிஷ்யனை வாழ்த்திய இயக்குனர் ராம்
  2. "மறக்க நினைக்கிறேன்", ஆனந்த விகடன், மே 1, 2013
  3. பிருந்தா சீனிவாசன் (11 சனவரி 2019). "புதிய தலைமுறை இயக்குநர்கள்: நம்மைச் சுற்றி நடக்கும் கதைகள்". செவ்வி. இந்து தமிழ். 12 சனவரி 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் மாரி செல்வராஜ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரி_செல்வராஜ்&oldid=3578033" இருந்து மீள்விக்கப்பட்டது