மாய உணர்ச்சி
Appearance
மயக்கமோ குழப்பமோ இல்லாத தெளிவான சூழலில் நமது புலன்கள் நம்மை ஏமாற்றுவது மாய உணர்ச்சி அல்லது மாயத் தோற்றம் அல்லது தோற்ற மயக்கம் (Illusion) எனப்படுகிறது. ஐம்புலன்கள் இத்தகைய மாய உணர்ச்சிகளுக்கு உட்பட முடியும். வெயில் காலங்களில் நண்பகல் நேரத்தில் பயணம் செய்யும் போது சற்று தொலைவில் தண்ணீர் தேங்கி நிற்பதைப் போல தோன்றும், அருகில் சென்று பார்த்தால் அங்கே தண்ணீர் இருக்காது. இதனை கானல் நீர் என்கிறோம். இது கண் உணரும் மாய உணர்ச்சியாகும். எட்ட நின்று பார்க்கும் போது பாம்பாக தோன்றும் கயிறும் ஒருவித மாய உணர்ச்சியாகும். நெல்லிக் கனியைத் தின்று விட்டு தண்ணீர் குடித்தால் இனிப்பாக நாக்கு உணருகிறது. உண்மையில் தண்ணீரில் இனிப்பு இல்லை. இது நாக்கு உணரும் மாய உணர்ச்சியாகும்