மாபெல் நார்மன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாபெல் நார்மன்ட்
சுமார் 1920களில் நார்மன்ட்
பிறப்புஅமாபெல் எதெல்ரீட் நார்மன்ட்
(1893-11-09)நவம்பர் 9, 1893
நியூ பிரைட்டன், இசுட்டேட்டன் தீவு நியூயார்க்கு, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புபெப்ரவரி 23, 1930(1930-02-23) (அகவை 36)
மோன்ரோவியா, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
கல்லறைகிளாவரி கல்லறை லாஸ் ஏஞ்சலஸ்
மற்ற பெயர்கள்மாபெல் நார்மன்ட் கோடி
பணி
  • நடிகர்
  • இயக்குநர்
  • திரைக்கதை எழுத்தாளர்
  • நகைச்சுவை நடிகை
செயற்பாட்டுக்
காலம்
1910–1927
வாழ்க்கைத்
துணை
லீவ் கோடி (தி. 1926)

அமாபெல் எதெல்ரீட் நார்மன்ட் ( Amabel Ethelreid Normand ) (நவம்பர் 9, 1893  - பிப்ரவரி 23, 1930)[1], பொதுவாக மாபெல் நார்மன்ட் என்று அழைக்கப்படும் இவர் அமெரிக்காவின் ஊமைத் திரைப்பட நடிகையும், இயக்குநரும் மற்றும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார். இவர் கீஸ்டோன் ஸ்டுடியோஸ் என்ற படபிடிப்பு நிறுவனத்தின் [2] உரிமையாளர் மேக் சென்னட் என்பவருடன் சேர்ந்து பிரபலமான நட்சத்திரமாக இருந்தார். [3] மேலும் 1910 களின் பிற்பகுதியிலும் 1920 களின் முற்பகுதியிலும் இவரது தொழில் வாழ்க்கை உச்சத்தில் இருந்தது. இவர் மேபெல் நார்மன்ட் ஃபீயூச்சர் பிலிம் என்ற திரைப்பட படப்பிடிப்பு வளாகத்தை நிறுவினார்.[4] திரையில், இவர் சார்லி சாப்ளினுடன் பன்னிரண்டு வெற்றிகரமான படங்களிலும்,[5] ரோஸ்கோ "ஃபேட்டி" அர்பக்கிளுடன் பதினேழு வெற்றிப் படங்களிலும் தோன்றினார். சில சமயங்களில் சாப்ளினை தனது முன்னணி நடிகராகக் கொண்டு திரைப்படங்களை எழுதி இயக்கினார் (அல்லது இணையாக எழுதி இயக்குகினார்). [6]

1922 இல் நார்மன்டின் நண்பரான இயக்குனர் வில்லியம் டெஸ்மன்ட் டெய்லரின் கொலை மற்றும் 1924 இல் நார்மண்டின் ஓட்டுநர் ஜோ கெல்லி என்பவரால் கோர்ட்லேண்ட் எஸ். டைன்ஸ் சுட்டுக் கொன்றது போன்ற பெயர் துப்பாக்கி சூடுகளில் இவரது மீண்டும் மீண்டும் இணைக்கப்பட்டது. [7] காவல் துறையின் விசாரணைக்குப் பிறகு, டெய்லரின் கொலையில் இவர் சந்தேகிக்கப்பட்டார். நார்மண்ட் 1923 இல் காசநோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இவரது உடல்நிலை மோசமடைந்தது. 1926 இல் திரைப்படங்களில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றார். மேலும், 1930 இல் தனது 36 வயதில் இறந்தார் [8] [9]

எ லிட்டில் ஹீரோ (1913, டச்சு மொழி பதிப்பு), சேகரிப்பு EYE ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ,நெதர்லாந்து

ஆரம்ப வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

ஃபாட்டி மற்றும் மேபல் அட்ரிஃப் என்ற படத்தில் லூக் என்ற ஒரு நாயுடன் ரோஸ்கோ அர்பக்கிள் மற்றும் நார்மன்ட் (1916)

இவர் நவம்பர் 9, 1893 இல் நியூயார்க்கில் உள்ள நியூ பிரைட்டனில் அமாபெல் எதெல்ரீட் நார்மண்ட் என்ற் பெயரில் பிறந்தார் (இது இசுடேட்டன் தீவின் ஒரு பகுதியாக நியூயார்க் நகரத்துடன் இணைக்கப்படுவதற்கு முன்பு). 1892 இல் இவர் பிறப்பதற்கு முன்பே இவரது தந்தை இறந்துவிட்டார். நார்மண்டின் தாயார், மேரி "மின்னி" ட்ரூரி, றோட் தீவின் தலைநகர் பிராவிடென்ஸ் பகுதியைச் சேர்ந்த [10] ஐரியப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.[11]

மாபெல்ஸ் ஸ்ட்ரேஞ்ச் பிரிடிகாமென்ட் (1914), சாப்ளின் நாடோடியாக நடித்த முதல் படம்

நார்மன்ட் தனது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் சிறிது காலம் நியூயார்க் நகரில் உள்ள விட்டாகிராப் படப்பிடிப்பு அரங்கத்தில் வாரத்திற்கு $25 ஊதியதிற்கு பணிபுரிந்தார். விட்டாகிராப் நிறுவனர் ஆல்பர்ட் இ. ஸ்மித் "எதிர்கால நட்சத்திரத்திற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதில் தவறு செய்த பல நடிகைகளில் இவரும் ஒருவர்" என்று கூறினார். 1911 ஆம் ஆண்டு டி. டபிள்யூ. கிரிஃபித் இயக்கிய ஹெர் அவேக்கனிங் என்ற நாடகக் குறும்படத்தில் நார்மன்டின் நடிப்பு கவனத்தை ஈர்த்தது. கிரிஃபித்தின் பயோகிராஃப் கம்பெனி என்ற படப்ப்டிப்பு நிறுவனத்தில் இருந்தபோது இயக்குனர் மேக் சென்னட்டை சந்தித்தார். பின்னர் இருவரும் ஒழுங்கற்ற உறவில் இருந்தனர். 1912 இல் கீஸ்டோன் ஸ்டுடியோவை நிறுவியபோது சென்னட் பின்னர் நார்மண்டை கலிபோர்னியாவிற்கு அழைத்துச் சென்றார்.

பிற்காலத் தொழில் மற்றும் இறப்பு[தொகு]

நார்மன்ட் தொடர்ந்து திரைப்படங்களைத் தயாரித்தார். 1926 ஆம் ஆண்டில் ஹால் ரோச் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இவர் ராகிடி ரோஸ், தி நிக்கல்-ஹாப்பர், மற்றும் ஒன் ஹவர் மேரீட் (இவரது கடைசி படம்) ஆகிய படங்களைத் தயாரித்தார். இவை அனைத்தையும் ஸ்டான் லாரல் இவருடன் இணைந்து எழுதியது. மேலும் லியோ மெக்கரே இயக்கிய ஷுட் மென் வாக் ஹோம்? ஆகியன். இவை அனைத்தும் இவரது தோழி மேரி பிக்ஃபோர்ட் உட்பட ஹாலிவுட் சமூகத்தின் விரிவான விளம்பர ஆதரவுடன் படங்கள் வெளியிடப்பட்டன.

1926 இல், இவர் நடிகர் லூ கோடியை மணந்தார். அவருடன் இவர் 1918 இல் மிக்கி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர்கள் பெவர்லி ஹில்ஸ் அருகிலுள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். இந்த சமயத்தில் நார்மன்டின் உடல்நிலை காசநோயால் பாதிக்கப்பட்டது. பொட்டெங்கர் காச நோய் மையத்தில் நீண்ட காலம் தங்கி சிகிச்சைப் பெற்ற பிறகு, இவர் நுரையீரல் காசநோயால் பிப்ரவரி 23, 1930 அன்று கலிபோர்னியாவின் மன்ரோவியாவில் தனது 36 வயதில் இறந்தார் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கல்வாரி கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Jaley, Thomas (June 5, 1900). 1900 USA Census Card. Census of the United States, State of New York, Borough of Richmond, Supervisor's District No. 2, Enumeration District 583, First Ward, Sheet #8. http://www.freewebs.com/looking-for-mabel/nov101893.htm. 
  2. Harper Fussell 1992, ப. 71–73.
  3. Harper Fussell 1992, ப. 50–52.
  4. "Mary Mallory / Hollywood Heights: Mabel Normand Studio Leads the Way". October 2022.
  5. Charlie Chaplin (1964). My Autobiography. Penguin. பக். 149. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-101147-9. https://books.google.com/books?id=8vJ5QAAACAAJ. 
  6. Harper Fussell 1992, ப. 64–70.
  7. "BLAME JEALOUSY FOR DINES SHOOTING; Los Angeles Police Think the Chauffeur Was Infatuated With Miss Normand. SHE CONTRADICTS HIS STORY Breaks Down From Excitement and Goes to Hospital -- Dines Develops Pneumonia. BLAME JEALOUSY FOR DINES SHOOTING". https://www.nytimes.com/1924/01/03/archives/blame-jealousy-for-dines-shooting-los-angeles-police-think-the.html. 
  8. cite magazine article Films in Review September 1974 Mabel Normand A Grand – Nephew's Memoir Normand, Stephen
  9. Ward Mahar, Karen (2006). Women Filmmakers in Early Hollywood. JHU Press. பக். 131. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8018-8436-5. https://archive.org/details/womenfilmmakersi0000maha. 
  10. Rhode Island State Census, 1875
  11. Sherman, William Thomas. "Mabel Normand: An Introductory Biography". mm-hp.com. Archived from the original on June 15, 2013. பார்க்கப்பட்ட நாள் June 14, 2013.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபெல்_நார்மன்ட்&oldid=3906018" இலிருந்து மீள்விக்கப்பட்டது